விவசாயிகளுக்கு உதவாத வேளாண் சட்டம்: பேரணியில் ராகுல் பேச்சு

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில் ராகுல் பேசியதாவது: வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் வரை, போராட்டத்தை
Congress, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, Rahul Gandhi, Cong, farmers, வேளாண் சட்டம், பிரதமர் மோடி, விவசாயிகள்,

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் ராகுல் பேசியதாவது: வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் வரை, போராட்டத்தை காங்கிரஸ் கைவிடாது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த சட்டம் உள்ளது. இதனால் தான் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுகிறோம். இந்த கறுப்பு சட்டங்களை பா.ஜ., அரசு திரும்ப பெற வேண்டும். கடந்த காலங்களில், மோடி அரசு, நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை பறிக்க முயன்றது. அப்போது காங்கிரஸ் தடுத்து நிறுத்தியது. தற்போது, பா.ஜ.,வும் அவர்களின் சில நண்பர்களும் மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இவ்வாறு ராகுல் பேசினார்.


latest tamil news


முன்னதாக, வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது: தாமதபடுத்தும் தந்திரமாகவே, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தனக்கு அதிகாரம் உள்ளது. விவசாயிகளை சோர்வடைய செய்ய முடியும் என பிரதமர் நினைக்கிறார். இது தவறு. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மரியாதையை கூட அளிக்க மோடி மறுக்கிறார். 100 விவசாயிகள் இறந்தாலும் கவலைப்பட மாட்டார். தனக்கு அதிகாரம் உள்ளது. சில நாட்கள் போராட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் சோர்வடைந்து சென்று விடுவார்கள் என மோடி நினைக்கிறார். ஆனால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ravindran - Chennai,இந்தியா
16-ஜன-202111:53:59 IST Report Abuse
P Ravindran சுடாலின், பப்பு மற்றும் உதயநிதி த்ரீ முஸ்கிட்டேர்ஸ் . எதற்கும் உதவாது உதவaaகரிகளின் கூட்டணி.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-ஜன-202110:38:53 IST Report Abuse
vbs manian chenga reddy ivar india vivasaya கோன்சாரத்தியத்தின் முக்கிய ஆலோசகர். இவர் சொல்வது. இவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் மற்றும் ஜானுபாரியில் வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முனக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் யாருமே செய்யவில்லை என்கிறது. இவர் மேலும் சொல்வது. டில்லி போராட்டம் வெறும் ஐந்து சதவீத விவசாயிகளால் நடத்தப்படுகிறது. இவர்களையே மத்திய அரசு திரும்ப திரும்ப வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து பேசி முகத்தில் கரி பூசிக்கொள்கிறது. மற்ற மாநிலங்களில் விவசாயி இல்லையா , விவசாயம் நடக்கவில்லையா.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-ஜன-202108:05:33 IST Report Abuse
RajanRajan ஏன் பப்பு இந்த வேளாண் சட்டம் விவசாயிக்கு உதவ வில்லை என்றால் யாருக்கு உதவுதாம் அந்த இடைதரகர்களும் மண்டி மாபியாவுக்கும் தான் உதவுகிறதா என்ன? நீ எப்பவுமே இப்படி தான் அவல் என்று உரலை இடித்த கதை தான் உன் கதை. ஜல்லிக்கட்டுக்கு எதிராய் சட்டம் போட்டு விட்டு இன்று ஜல்லிக்கட்டு பார்த்தாய். தமிழர் கலாச்சாரத்தை காப்போம்னு கையை ஆட்டி விட்டு வந்துட்டே. போப்பா போ வேற வேலைக்கு ஏதாச்சும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X