பொது செய்தி

இந்தியா

ஜன.,19ல் மத்திய அரசு - விவசாயிகள் மீண்டும் பேச்சு

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடந்த 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்ளை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண
farmbill, government, farmers, talk,  விவசாயிகள், வேளாண் சட்டம்,மத்திய அரசு, பேச்சுவார்த்தை, தோல்வி

புதுடில்லி: மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடந்த 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்ளை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு எட்டு சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. 15ம் தேதி ஒன்பதாவது சுற்று பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.மேலும் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடன் பேச நான்கு பேர் அடங்கிய குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுடன் இன்று நடந்த ஒன்பதாவது சுற்று பேச்சில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நரேந்திர சிங் தோமர், சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


latest tamil news



அப்போது உச்சநீதிமன்ற குழுவை நிராகரிப்பதாக தெரிவித்தனர். அதேபோல், வேளாண் சட்டத்தை திரும்ப பெற முடியாது தெரிவித்தது. இந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, தோல்வியில் முடிந்தது. மீண்டும் 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்க நாங்கள் முயற்சித்தோம். போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். உச்சநீதிமன்றம், நாட்டின் உயரிய அமைப்பு. உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த மாதிரியான உத்தரவிற்கு கட்டுப்படுவோம். வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202122:24:26 IST Report Abuse
ஆப்பு மத்திய அரசு சட்டங்களை வாபஸ் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லைன்னு சொல்லுது. விவசாயிகளோ வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லைங்கறாங்க. இப்படி பேச முடியாதவங்க 9 முறையாக என்ன பேசியிருப்பாங்க? உக்காந்து சாப்பிட்டிருப்பாங்க. அடுத்த பேச்சுவார்த்தைக்கு(?) தேதி குறிச்சிட்டு எழுந்து போயிருப்பாங்க. நடத்துங்க... நடத்துங்க. ஒண்ணும் பேசாமலே பேச்சுவார்த்தை.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
15-ஜன-202118:20:47 IST Report Abuse
vadivelu உச்ச நீதி மன்றம் அமைத்த குழுவுடன் அல்லவா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜன-202118:18:35 IST Report Abuse
g.s,rajan கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் . ஜி.எஸ்.ராஜன், சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X