சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு, மீண்டும், 'டார்ச் லைட்' சின்னம் கிடைத்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், 'டார்ச் லைட்' சின்னத்தில், கமல் கட்சி போட்டியிட்டது. அதையே, தங்கள் கட்சி சின்னமாக விளம்பரப்படுத்தி வந்தனர். வரும் சட்டசபை தேர்தலில், டார்ச் லைட் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அச்சின்னம், புதுச்சேரியில் மட்டும் கிடைத்தது.
தமிழகத்தில், கமல் கட்சிக்கு, டார்ச் லைட் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றத்தை, கமல் நாடியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்திலும், டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளதாக, 'டுவிட்டரில்' கமல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
மக்கள் நீதி மையம் கட்சிக்கு, மீண்டும், டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச போராடிய, மார்ட்டின் லுாதர் கிங்கின் பிறந்த நாளில், இது, நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், என்னோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார் .
![]()
|
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2) pic.twitter.com/MqzKEBiidR
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE