பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புது டில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார்.உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும்.

புது டில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார்.



latest tamil news




உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும். இதனை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை கவனிக்கிறது. ரூ.20,000-க்கு மேல் நன்கொடை கிடைத்தால் அவற்றை காசோலையாக பெறுவது என முடிவு செய்துள்ளனர். நன்கொடையாக பெறும் பணத்தை 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை ஆன்லைன் நன்கொடை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது.


latest tamil news




இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் முன்னணி அமைப்பான வி.எச்.பியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இச்சந்திப்பில் வி.எச்.பி., சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மற்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவரும் முன்னாள் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களிடம் 5 லட்சத்து 100 ரூபாயை தனது பங்களிப்பாக ஜனாதிபதி வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202117:13:38 IST Report Abuse
Malick Raja முதன் முதலாக முதல்குடிமகன் நன்கொடை அளித்துள்ளது பாராட்டிற்குரியது ... வாழ்த்துக்கள் ..மேலும் வேறு எதையும் குறிப்பிடக்கூடாது ..
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
16-ஜன-202113:19:32 IST Report Abuse
Raj நாட்டில் இன்னும் பல கோடி மக்கள் குடிசையில் வாழ்கிறார்கள் தெரியுமா திரு ஜனாதிபதி அவர்களே
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
16-ஜன-202114:21:01 IST Report Abuse
இரா. பாலாராஜ்: ஜனாதிபை கொடுத்தது அரசுப் பணம் அல்ல. அவரது சொந்தப் பணம். ஒருவர் தனது சொந்தப் பணத்தினை அவர் விருப்பம் போல கொடுக்கலாம். இன்னும் பல கோடி குடும்பங்கள் குடிசையில் வாழும் போது நீங்கள் ஏன் இண்டெர்னெட்டிற்கு செலவளிக்கிறீர்கள்? ஏழைகளுக்குக் கொடுகலாமே. ராம்நாத் கோவிந் மட்டும்தான் உதவ வேண்டுமா என்ன? உங்களின் புரிதலுக்காக: குஜராத்தில் படேலின் சிலை அரசு செலவில் கட்டப்படவில்லை. அது போலவே ராமர் கோவிலும் அரசு செலவில் கட்டப்படவில்லை....
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
16-ஜன-202110:23:11 IST Report Abuse
தமிழன் காசு கொடுங்க அது உங்க விருப்பம்.... ஆனா வெளிய நின்னுதான் கும்பிடனும் ...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
16-ஜன-202114:17:20 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஏன் தீண்டாமையை வளர்க்கிறாய் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X