கோலாலம்பூர்: நிலுவையில் உள்ள விமான நிலைய குத்தகை கட்டணத்தை கட்ட தவறியதால் புறப்பட தயாராய் இருந்த பாகிஸ்தான் போயிங் 777 விமானத்தை தடுத்து நிறுத்தி கைப்பற்றியது மலேசியா அரசு

இது குறித்து கூறப்படுவதாவது: ஜெட் குத்தகை தொடர்பாக மலேசிய அரசுக்கும் பாகிஸ்தான் விமான நிறுவனத்திற்கும் இடையே இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் விமான நிறுவனமான போயிங் 777 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாகிஸ்தானிற்கு புறப்பட தயாராக இருந்தது. இதனிடையே மலேசியா அரசு பாகிஸ்தான் விமானத்தை பறிமுதல் செய்தது. அதில் பயணம் செய்ய இருந்த விமான பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , மலேசிய அரசு ஒரு தலைபட்சமான நடவடிக்கை எடுத்துள்ளது.இதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE