புழுவை மனித உணவாக அங்கீகரித்தது ஐரோப்பா!

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
பெர்மா: கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் புழு, மனிதர்கள் உண்பதற்கு பாதுகாப்பானது மற்றும் அதிக புரதச் சத்து நிரம்பியது என்று அதனை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. உணவுப் புழுக்கள் ஐரோப்பாவில் மனித உணவாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பூச்சியாக மாறியுள்ளது. இந்த மஞ்சள் புழுக்களை வறுத்து மசலாக்களில் பயன்படுத்தவும், இதனை மாவாக்கி

பெர்மா: கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் புழு, மனிதர்கள் உண்பதற்கு பாதுகாப்பானது மற்றும் அதிக புரதச் சத்து நிரம்பியது என்று அதனை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது.latest tamil news


கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் புழுவை மனிதர்கள் சாப்பிட ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. இந்த மஞ்சள் புழுக்களை வறுத்து மசலாக்களில் பயன்படுத்தவும், மாவாக்கி பிஸ்கட்டுகள், பாஸ்தா மற்றும் ரொட்டிகளில் சேர்கவும், பிற உணவு வகைகளில் முழுதாக பயன்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவு என்று கூறி ஆங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு பூச்சி வளர்ப்பு நிறுவனமான மைக்ரோநியூட்ரிஸின் விண்ணப்பத்திற்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவையும் உண்பதற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். உணவு புழு பாக்கெட்டுகள் சூப்பர் மார்க்கெட்டிற்கு வர சிறிது காலம் ஆகும். 2030ம் ஆண்டு புழுக்கள் உற்பத்தி 2.6 லட்சம் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உணவுப் புழுக்கள் ஐரோப்பாவில் மனித உணவாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பூச்சியாக மாறியுள்ளது. இந்த மஞ்சள் புழுக்களை வறுத்து மசலாக்களில் பயன்படுத்தவும், இதனை மாவாக்கி பிஸ்கட்டுகள், பாஸ்தா மற்றும் பிரட்களில் சேர்க்கவும், பிற உணவு வகைகளில் முழுதாக பயன்படுத்தவும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரெஞ்சு பூச்சி வளர்ப்பு நிறுவனமான மைக்ரோநியூட்ரிஸின் விண்ணப்பத்திற்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவையும் உண்பதற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

உணவுப்புழுக்கள் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவு என்று கூறியிருக்கும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு, பூச்சிகளுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை எதிர்விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் தற்போதைய நடவடிக்கை 27 ஐரோப்பிய நாடுகளின் இதனை அனுமதிக்கலாமா என்று முடிவு செய்வதற்கான ஆரம்பகட்டமாகும். ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே பூச்சிகளை கொண்ட பர்கர்கள், புழுக்கள் சார்ந்த உணவுகள் பயன்பாட்டில் உள்ளன.


latest tamil newsஐரோப்பாவில் உள்ள உளவியல் தடைகள், உணவுப்புழு பாக்கெட்டுகளை சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு வர சிறிது காலம் ஆகும் என்று சமூகவியலாளர் குறிப்பிடுகின்றனர். அத்தொழில் சார்ந்தவர்கள், வரும் ஆண்டுகளில் பூச்சி சார்ந்த உணவு பொருட்களுக்கான ஐரோப்பிய சந்தை விறுவிறுவென என உயரும், 2030-ல் அதன் உற்பத்தி 2.6 லட்சம் டன்களை எட்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
16-ஜன-202123:03:54 IST Report Abuse
THINAKAREN KARAMANI கண்டகண்ட புழு பூச்சிக்களைத் தின்னுங்க. அப்புறம் கொரானா வந்திருச்சு, புரானா வந்திருச்சுன்னு மொத்த உலக மக்களையும் புலம்பவிடுங்க. இதெல்லாம் வேணாங்க. நல்ல உணவைச் சாப்பிடுங்க நலமாக வாழுங்க.. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
16-ஜன-202114:09:11 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் எப்படியோ, காய்கறி விலை குறைந்தால் சரிதான் (காய்கறி விலை ஏறுவதன் மூலம் இடைத் தரகர்களே பலன் அடையறாங்க)
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
16-ஜன-202111:26:17 IST Report Abuse
Kumar இதை இங்க உள்ள மதங்கள் ஏற்றுக்கொள்கிறதானு ஒரு முறை சரியாக பார்த்து சொல்ல வேண்டும். இல்லைனா இங்க இருக்கிற ஒரு கோஷ்டி, கோவிலுக்கு முன்னாடி சட்டிய வைத்து புழுவ பொறிச்சு சாப்பிடுவாங்க. கேட்டா புழுவ தின்பது சுயமரியாதைனு போராட்டம் வேற செய்யுவாங்க. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X