பெர்மா: கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் உள்ள உணவுப் புழு, மனிதர்கள் உண்பதற்கு பாதுகாப்பானது மற்றும் அதிக புரதச் சத்து நிரம்பியது என்று அதனை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது.
![]()
|
உணவுப் புழுக்கள் ஐரோப்பாவில் மனித உணவாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பூச்சியாக மாறியுள்ளது. இந்த மஞ்சள் புழுக்களை வறுத்து மசலாக்களில் பயன்படுத்தவும், இதனை மாவாக்கி பிஸ்கட்டுகள், பாஸ்தா மற்றும் பிரட்களில் சேர்க்கவும், பிற உணவு வகைகளில் முழுதாக பயன்படுத்தவும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரெஞ்சு பூச்சி வளர்ப்பு நிறுவனமான மைக்ரோநியூட்ரிஸின் விண்ணப்பத்திற்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவையும் உண்பதற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
உணவுப்புழுக்கள் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவு என்று கூறியிருக்கும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு, பூச்சிகளுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை எதிர்விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் தற்போதைய நடவடிக்கை 27 ஐரோப்பிய நாடுகளின் இதனை அனுமதிக்கலாமா என்று முடிவு செய்வதற்கான ஆரம்பகட்டமாகும். ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே பூச்சிகளை கொண்ட பர்கர்கள், புழுக்கள் சார்ந்த உணவுகள் பயன்பாட்டில் உள்ளன.
![]()
|
ஐரோப்பாவில் உள்ள உளவியல் தடைகள், உணவுப்புழு பாக்கெட்டுகளை சூப்பர் மார்க்கெட்டிற்கு கொண்டு வர சிறிது காலம் ஆகும் என்று சமூகவியலாளர் குறிப்பிடுகின்றனர். அத்தொழில் சார்ந்தவர்கள், வரும் ஆண்டுகளில் பூச்சி சார்ந்த உணவு பொருட்களுக்கான ஐரோப்பிய சந்தை விறுவிறுவென என உயரும், 2030-ல் அதன் உற்பத்தி 2.6 லட்சம் டன்களை எட்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement