இந்தியாவின் உறுதியான முடிவு: பன்னாட்டு நிதியம் பாராட்டு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன் : கொரேனா தொற்று நோயை கையாண்டதிலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதிலும், இந்தியா உறுதியான முடிவை எடுத்துள்ளதாக, ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது. ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச நாடுகளின் பொருளாதார அறிக்கையை, பன்னாட்டு நிதியம், வரும், 26ம் தேதி வெளியிட உள்ளது. இதில், இந்தியாவிற்கு
 இந்தியா, உறுதியான முடிவு, பன்னாட்டு நிதியம், பாராட்டு

வாஷிங்டன் : கொரேனா தொற்று நோயை கையாண்டதிலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதிலும், இந்தியா உறுதியான முடிவை எடுத்துள்ளதாக, ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது.

ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச நாடுகளின் பொருளாதார அறிக்கையை, பன்னாட்டு நிதியம், வரும், 26ம் தேதி வெளியிட உள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிரான தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
ஏனெனில், கொரோனா வைரசை கையாண்டதிலும், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சமாளிப்பதிலும், மிக உறுதியான முடிவை இந்தியா எடுத்ததே காரணம்.
மிகப் பெரிய மக்கள் தொகை உடைய இந்தியாவில், ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் கையாளப்பட்டன.

இதனுடன் எடுத்த கொள்கை முடிவுகள் நல்ல பயனைத் தந்துள்ளன. அதனால், பொருளாதார வளர்ச்சி சூடு பிடித்து, கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்திற்கு, நாடு நகர்ந்துள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்திய நிதிக் கொள்கைகள் பாராட்டத்தக்கவை. இதனால், வளரும் நாடுகளின், சராசரி, 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை விட, இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

எதிர்காலத்தில் போட்டித் தன்மையை தீர்மானிக்கும் இடத்தில், இந்தியா நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த காலத்திலும், சீர்திருத்தங்களை, இந்தியா கைவிடக் கூடாது.
அதேசமயம், இந்தியாவில், பாலின சமத்துவத்தில் இன்னும் பின்தங்கியுள்ளது. அமைப்பு சாரா துறையில் பெண்கள் அதிகம் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வேளாண் சட்டங்கள் சிறந்தவை


இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்கள், விவசாயத் துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் மிகப் பெரிய முன்னேற்றம் எனலாம்; இது, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுத்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும்.
-கெரி ரைஸ்,
தகவல் தொடர்பு துறை இயக்குனர்,
ஐ.எம்.எப்.,

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202109:56:27 IST Report Abuse
ஆப்பு 15 லட்சம் போட்டு, வருஷம் 2 கோடி பேருக்கு வேலை குடுத்து 150 லட்சம் கோடி கருப்புபணம் கொண்டாந்த விஷயமெல்லாம் கிற்ஸ்டினாவுக்கு தெரியாது போலிருக்கு. தெரிஞ்சா கோயிலே கட்டிருவாங்க.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
16-ஜன-202110:29:35 IST Report Abuse
Darmavanகிறுக்கனின் உளறல்...
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-202117:47:57 IST Report Abuse
Yaro Oruvanஅதுவும் ஜமுக்காளத்தில் வடி கட்டிய ... உளறல்...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202106:07:44 IST Report Abuse
Mani . V அட்ரா சக்கை, அட்ரா சக்கை.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜன-202105:55:57 IST Report Abuse
blocked user பப்புவும் அவர் சார்ந்த பொருளாதார மேதைகள் சொன்னால்தான் நாங்கள் ஒத்துக்கொள்வோம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X