வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். அவர் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றதும் தான் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தற்போது விவரித்து வருகிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை சீர்செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

சிறு தொழில்களை இதற்காக ஊக்குவிக்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். நடுத்தரவர்க்க மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. மின்னனு பரிவர்த்தனையை சிறிதுகாலம் ஒத்தி வைத்துவிட்டு நேரடி பணப்பரிவர்த்தனை செய்யவும், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை, உணவு மானியம் ஆகியவற்றை அளிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கமலா ஹாரிஸுக்கு இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஜோ பைடன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நிவாரணத் தொகையாக முன்னதாக 600 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. இது போதாது எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜோ பைடனைத் தவிர வேறுயாராலும் இந்த நிலைமையை திறம்பட கையாள முடியாது என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று கூட்டத்தில் பேசிய ஜோ பைடன் அமெரிக்க பொருளாதார மீட்புக்காக தான் 1.9 டிரில்லியன் நிதியை ஒதுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நிவாரணத்துக்காக 400 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு நாம் செய்கைகள் முனைப்பாக இருக்கவேண்டும் என்று அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE