'நோ நோ!' சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (122) | |
Advertisement
சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், 'அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், 'ஆளுமை மிக்க தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., திகழ்கிறார்' என்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாராட்டு பேச்சும், அ.தி.மு.க.,
சசிகலா, பழனிசாமி, முதல்வர்

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், 'அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன், 'ஆளுமை மிக்க தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., திகழ்கிறார்' என்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாராட்டு பேச்சும், அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


இம்மாத இறுதியில், பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை வரும் சசிகலாவுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், சசிகலாவை புறக்கணித்து, அவரை சேர்க்காமல், அ.தி.மு.க.,வை வழி நடத்திச் செல்ல, முதல்வர் இ.பி.எஸ்., விரும்புகிறார்.

அதற்கு முத்தாய்ப்பாக, 'சசிகலாவால் நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்' என, இ.பி.எஸ்., கூறி வருகிறார். 'தி.மு.க.,வை எதிர்க்க வேண்டுமெனில், சசிகலா போன்றவர்களையும், அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, சென்னையில் நடந்த, 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
அவரது பேச்சை, இ.பி.எஸ்., ரசிக்கவில்லை. 'குருமூர்த்தி தன் ஆலோசனையை, அமெரிக்காவைச் சேர்ந்த டிரம்பிடம் கூறட்டும்' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.

அதே துக்ளக் விழாவில் பங்கேற்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், 'ஆளுமை மிக்க தலைவர் இ.பி.எஸ்., ஆட்சியை தக்க வைத்திருப்பது, அவரது ஆளுமையை பறைசாட்டுகிறது' என, பாராட்டினார்.முதல்வர் இ.பி.எஸ்.,சை, நட்டா பாராட்டி பேசிய பேச்சை, அ.தி.மு.க., தொண்டர்கள் பொங்கல் பரிசாக கருதுகின்றனர். மாநில நிர்வாகிகள் முதல், கிளை நிர்வாகிகள் வரை, உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் பதவியை, இ.பி.எஸ்., ஏற்றதும், அவர் அதிகபட்சம் ஒரு மாதம் தாக்குபிடித்தால் ஆச்சரியம் என, ஆரூடம் கூறினர். அதனால், கட்சியினர் மத்தியிலும், கடும் குழப்பம் நிலவியது. ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சிகள், எல்லா முயற்சிகளையும் செய்தன.

இதனால், முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் நிலையற்ற தன்மை நிலவியது. ஆனால், காவிரி, முல்லை பெரியாறு போன்ற நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளை, முதல்வர் இ.பி.எஸ்., மீட்டெடுத்த செயலால், அவரை மக்கள் நிமிர்ந்து பார்க்க துவங்கி உள்ளனர்.


அது போலவே, டெல்டா மாவட்டங்களை, வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்ததால், விவசாயிகளும், அவர் பின்னால் அணிவகுக்கத் துவங்கி உள்ளனர்.தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் கட்டுப்பட்டது; அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பரிசு வழங்கியது போன்ற திட்டங்கள் வாயிலாக, மக்கள், தொண்டர்கள் மனங்களை கொள்ளை அடித்து, 'மாஸ்' முதல்வராக, இ.பி.எஸ்., புதிய அவதாரம் எடுத்துள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜன-202123:34:35 IST Report Abuse
madhavan rajan ஆமாம். அவர் இவரை ஆதரிக்கச் சொன்னார். எம் எல் ஏ க்கள் ஆதரித்தார்கள். ஆனால் அவர் இவரை முதல்வர் ஆக்கவில்லை. கவர்னர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-ஜன-202123:46:48 IST Report Abuse
Vijay D Ratnam அறிவு ஜீவிக்கும், அரைவேக்காடுக்கும் உள்ள வித்தியாசம் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். சோ மறைவுக்கு பிறகு துக்ளக் பத்திரிக்கையை நடத்துவதால் குருமூர்த்தி தன்னை சோ போல அரசியல் சாணக்கியனாக, கிங்மேக்கராக நினைத்துக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக பெனாத்துகிறார். பாஜவுக்காக இவர் வாய்க்கு வந்தபடி உளறுவதை அதிமுக பொறுத்துக்கொள்கிறது. போனவாரம் வரைக்கும் ரஜினி வருவார், தமிழக அரசியல் களம் மாறும், எல்லாத்தையும் தூக்கி நட்டு வைப்பார என்று ஏன்னா பில்டப்பு. இருப்பதஞ்சி வருஷமா இந்தா வரேன் அதோ வர்றேன்னு சவடால் உட்டுக்கிட்டு இருந்த அந்தாளு என்னடான்னா எனக்கு வயசாயிடிச்சி, ஒடம்பு முடியல, சீக்காளி ஆயிட்டேன், ரெண்டு கிட்னியும் அவுட்டு, டாக்டர்கள் ஒழுங்கு மரியாதையா வூட்டுக்குள்ள இரு, தெருத்தெருவா சுத்துனா அப்புறம் அப்பீட்டாவ வேண்டியதுதாங்குறாரு, நான் வரமாட்டேன் என்ன உட்டுடுங்கன்னு ஓடிட்டாரு. இந்த குருமூர்த்தி மாதிரி உதார் பேர்வழிகள் பேச்சை கேட்டுகிட்டு ரங்கராஜ் பாண்டே, கோலாகல ஸ்ரீனிவாஸ், மாரிதாஸ் போன்றவர்கள் பயங்கரமா ரஜினி பஜனை பாடி தங்கள் பேரை கெடுத்துக் கொண்டதுதான் மிச்சம். பெருசு பொன்.ராதாகிருஷ்ணன் ரொம்ப பேசுனாரு. டீசண்ட்டாக பாலிடிக்ஸ் செய்துகொண்டிருந்த வானதி சீனிவாசன், இந்த அரை டவுசர் அண்ணாமலை IPS, போன்றவர்கள் எல்லோரும் அதிமுகவை ரொம்ப மட்டமா பேச தொடங்கினாங்க. அமித்ஷா, நட்டா அவர்களே எதை எங்க வைக்கணுமோ அங்க வைங்க. நாங்கல்லாம் வௌக்குமாற்றை பீரோவில் வைக்கமாட்டோம்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜன-202123:37:02 IST Report Abuse
madhavan rajanரத்தினம் அவர்கள் வௌக்குமாற்றை லாக்கரில்தான் வைப்பார் போலிருக்கிறது. எந்த குடும்பத்தில் அதை பீரோவில் வைத்து பார்த்திருக்கிறார்? புதிய கண்டுபிடிப்பாக இருக்கே?...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜன-202123:38:37 IST Report Abuse
madhavan rajanகுருமூர்த்தி, பாண்டே, ஸ்ரீனிவாஸ், மாரிதாஸ், அண்ணாமலை ஆகியோருக்கு பயப்படற அளவுக்குத்தான் உங்களை போன்றவர்கள் இருக்கீங்களா? அவங்களுக்கே அலறினா ரஜனி வந்திருந்தா உங்க தலைவருக்கு ....... ஆகியிருக்கும்....
Rate this:
Cancel
Mugesh - Chennai ,இந்தியா
16-ஜன-202123:42:49 IST Report Abuse
Mugesh ஏப்பா எடப்பாடி முதல்வர் ஆவதற்கு முன்னாள் தவழ்ந்து தவழ்ந்து போய் காலில் விழுந்தது நீயப்பா நன்றி மறக்கலாமா
Rate this:
karutthu - nainital,இந்தியா
18-ஜன-202117:13:08 IST Report Abuse
karutthuஅப்போ மகேசு நீ உதவாத நிதி பேசினதை ரசிக்கிறாயா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X