அரசியல் செய்தி

தமிழ்நாடு

'என் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி': ஸ்டாலின்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
சென்னை :''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், என் முதல் கையெழுத்து, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பாகவே இருக்கும்,''என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஆவடி, கோணாம்பேடு பகுதியில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவில், அவர் பேசியதாவது:தை முதல் நாள் தான், தமிழர்களுக்கு புத்தாண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். நமக்கு இன்னும், நான்கு
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை :''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், என் முதல் கையெழுத்து, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பாகவே இருக்கும்,''என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஆவடி, கோணாம்பேடு பகுதியில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவில், அவர் பேசியதாவது:தை முதல் நாள் தான், தமிழர்களுக்கு புத்தாண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். நமக்கு இன்னும், நான்கு மாதங்களில் வழி பிறக்கும்; பிறந்தே தீரும்.

கோவிலுக்கு எதிரே நின்று பேசுகிறேன். நம்மை கோவில்களுக்கு எதிரி போல் பேசுகின்றனர். 'கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது' என்பார், கருணாநிதி. கொடியவர்களுக்கு எதிராகவே போராடுகிறோம்.

என் மனைவி, போகாத கோவில்களே இல்லை. தி.மு.க.,வினர் கூட சந்தனம் இட்டுள்ளனர். நான் பக்தியை குறை சொல்லவில்லை. அது, அவர்கள் விருப்பம். 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்பதே, அண்ணாதுரையின் வழி; அவர் வழியில் நடப்போம்.அ.தி.மு.க., 10 ஆண்டுகளாக, ஆட்சியில் உள்ளது. மறைந்த ஜெயலலிதா குறித்து, விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆட்சி கொடுமையானது. இ.பி.எஸ்., தவழ்ந்து வந்து, ஆட்சியை பிடித்தார்.

மக்கள் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால், மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. அவர், என்னைப் பற்றி குறை கூறுகிறார். எனக்கு அரசியலில், 50 ஆண்டு கால வரலாறு உள்ளது.

விவசாய சட்டங்களை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது; அ.தி.மு.க., ஆதரித்து பேசி வருகிறது. கருணாநிதி, 7,000 கோடி ரூபாய் விவசாய கடனை, தள்ளுபடி செய்வதாக அறிவித்த போது, கேலி செய்தனர். ஆனால், ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், விவசாய கடன் தள்ளுபடி செய்தார்.
இதில், அ.தி.மு.க.,வினரே அதிக பயன் பெற்றனர். ஆனால், கருணாநிதி, அனைவரையும் விவசாயிகளாக பார்த்தார்.

அதுபோல, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், என் முதல் கையெழுத்தே, விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக தான் இருக்கும்.உழவர்களுக்கான திருநாளில், உழவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்கு இன்னும், நான்கு மாதங்கள் பொறுங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


தமிழ் கட்டாயம்



'மத்திய அரசு பணிகளுக்கான அனைத்து தேர்வுகள் மற்றும் நடைமுறைகளிலும், தமிழை கட்டாயம் சேர்க்க, மத்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:


தபால் துறை கணக்கர் பணிக்கான தேர்வுகள், தற்போது தமிழிலும் நடத்தப்படும் என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைகிறேன். நடவடிக்கை எடுத்த, மத்திய தபால் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி.எதிர்காலத்தில், மத்திய அரசு பணிகளுக்கான அனைத்து தேர்வுகள் மற்றும் நடைமுறைகளிலும், தமிழை கட்டாயம் சேர்க்க, மத்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


திருவள்ளுவர் தினம்

அவரது மற்றொரு அறிக்கை: உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கியவர், திருவள்ளுவர். தமிழறிஞர் பெருமக்களின் ஆய்வு நோக்கிலான கோரிக்கை அடிப்படையில், திருவள்ளுவர் நாளையும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கையும் நடைமுறைப்படுத்தியது, தி.மு.க., அரசு.தமிழர் பண்பாட்டு அடையாளமான திருக்குறளை நினைவில் வைத்து, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற, குறள் நெறியை, எந்நாளும் கடைப்பிடிப்போம். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
18-ஜன-202111:13:21 IST Report Abuse
sankar ஓவர் பில்ட்டப் உடம்புக்கு ஆகாது தம்பி
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
16-ஜன-202121:59:49 IST Report Abuse
sankaranarayanan முதலில் உன்னுடைய பேனாவில் இங்கு இருக்கிறதா என்று பார்? , உன்னிடம் இருப்பது இங்கே இல்லாத பேனா, அந்தக்கோ அப்படி இருக்கையில், எப்படி அய்யா?, நீ கையெழுத்து போடுவாய்? வெறும்வாயை மேலும் வீரனப்பா நீ சபாஷ்
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
16-ஜன-202120:42:45 IST Report Abuse
rajan_subramanian manian யார் முதல் கையெழுத்து போடபோகிறார்கள் என்பது அந்த இயற்கைக்குத்தான் தெரியும். உலக்கை, ஆமை, சுடலை, அன்புமணியாகிய நான்,அல்லது எடப்பாடியா என்று ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X