எக்ஸ்குளுசிவ் செய்தி

தலைமை பிறப்பித்த உத்தரவு உதயநிதியிடம் செல்லுபடியாகாது

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
'பேனர், போஸ்டர்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யாருடைய படமும் இடம் பெறக்கூடாது' என்ற, அக்கட்சி தலைமை அறிவிப்பை, இளைஞர் அணி செயலர் உதயநிதி அலட்சியப்படுத்தி வருகிறார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், தி.மு.க., தரப்பில், தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டு உள்ளது. இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 20 பேர், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.'மக்கள்
Banner, Poster, Udhayanidhi, Udhayanidhi Stalin

'பேனர், போஸ்டர்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யாருடைய படமும் இடம் பெறக்கூடாது' என்ற, அக்கட்சி தலைமை அறிவிப்பை, இளைஞர் அணி செயலர் உதயநிதி அலட்சியப்படுத்தி வருகிறார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், தி.மு.க., தரப்பில், தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டு உள்ளது. இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 20 பேர், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.'மக்கள் கிராம சபை' என்ற பெயரில், ஸ்டாலின் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கன மழை காரணமாக, அமைச்சர்கள் தொகுதியில் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற பிரசார கூட்டங்களுக்கான, 'பேனர், போஸ்டர்'களில், ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யாருடைய படமும் இடம்பெறக் கூடாது என, டிச., 22ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவை ஏற்று, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள்,எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் படங்களை, பேனர், போஸ்டரில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், உதயநிதிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்ற, திருச்சி கூட்டத்திற்கு தடபுடல் விளம்பரங்கள் செய்யப்பட்டு, பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது, மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி தலைமையின் தடை அறிவிப்பு, உதயநிதியிடம் மட்டும் எடுபடவில்லை. கட்சி நிர்வாகிகளிடம், உதயநிதி தரப்பில் இருந்து, 'கட்சி அறிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம். போஸ்டர், பேனர் எல்லாவற்றிலும் உதயநிதி படம் இருக்க வேண்டும்' என, வலியுறுத்தப்படுகிறது. சமீபத்தில், திருச்சி சென்ற உதயநிதிக்கு, விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், உதய நிதியின் படங்களே அதிகளவில் இடம் பிடித்தன. கட்சியின் தாரகமந்திரமான, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் காணாமல் போய் விட்டதாக, மாவட்ட செயலர்கள் புலம்புகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.


அழகிரி சொன்னது நடக்குமோ!
தமிழக பா.ஜ., கலை, இலக்கிய அணி தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:தி.மு.க., தலைமை, ஒரு அறிவிப்பு வெளியிடுகிறது. அதன்படி, ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யார் படமும், தி.மு.க., பேனர்களில் இடம் பெறக்கூடாது. அந்த உத்தரவு, மற்ற தலைவர்கள் பிரசார பயணத்தில் கடைப்பிடிக்கப்பட்டு, அவர்களின் படங்கள் நீக்கப்படுகின்றன.

ஆனால், திருச்சிக்கு சென்ற உதயநிதிக்கு மட்டும், அந்த அறிக்கை செல்லுபடியாகவில்லை. மூத்த நிர்வாகிகள் சலிப்படைந்துள்ளனர்.உதயநிதி, கட்சியில் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால், அழகிரி சொன்னது போல, ஸ்டாலின் என்றைக்குமே வருங்கால முதல்வர் தான். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
21-ஜன-202121:20:06 IST Report Abuse
madhavan rajan க, க, க, எல்லாம் முக குடும்பத்தினருக்கு கிடையாது என்பதை இன்னுமா திமுக தலைவர்களும் தொண்டர்களும் புரிந்துகொள்ளவில்லை. மற்றவர்களுக்குத்தான் பகுத்தறிவு கொள்கை. சுடலையின் குடும்பத்துக்கு அது கிடையாது. முகவின் சமாதியில் பகுத்தறிவுப்படியா மாதம் சில லட்சங்கள் செலவு செய்கிறார்கள்? தினமும் முரசொலியை சமாதியில் வைப்பது எந்த பகுத்தறிவில் வருகிறது? சமாதியில் பஜனை செய்து சில சமயம் பகுத்தறிவை பறைசாற்றுகிறார்கள். போயா நீங்களும் உங்க பகுத்தறிவும்.
Rate this:
Cancel
SUN MOHAN -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-202120:16:17 IST Report Abuse
SUN MOHAN அழகிரி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், ஏன்என்றால் அவரது உள்ளம் தூய்மையான நல்ல மனதோடு இருக்கிறது, மனசாட்சி க்கு துரோகம் செய்யாமல் இதுவரை பொருத்துக்கொண்டு இருக்கிறார்,அப்பனும் பிள்ளையும் அடித்துக்கொண்டு வாழும் இந்த காலத்தில் அழகிரி தனது தம்பிக்காக இவ்வளவு நாட்கள் அமைதியாக இருக்கும் பெருந்தன்மை பாறாட்டுக்குறியது,.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
18-ஜன-202118:28:49 IST Report Abuse
thulakol தி மு க பிரைவேட் லிமிடெட் கம்பெனி ராஜா வீடு கன்னுகுட்டி அப்படி தான் இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X