அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி முதல்வர் ஆவாரா?: கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
கரூர்: 'இ.பி.எஸ்., மீண்டும் முதல்வர் ஆவாரா' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிளி ஜோசியம் பார்த்தார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஏமூர் பஞ்சாயத்து பகவதியம்மன் கோவில் திடலில், சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு
முதல்வர், கிளி ஜோசியம், அமைச்சர்

கரூர்: 'இ.பி.எஸ்., மீண்டும் முதல்வர் ஆவாரா' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிளி ஜோசியம் பார்த்தார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஏமூர் பஞ்சாயத்து பகவதியம்மன் கோவில் திடலில், சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.

அந்த பகுதியில் கிளி ஜோசியம் பார்த்து கொண்டிருந்த பெரியவர் முன் அமர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், 100 ரூபாயை கொடுத்து, ''முதல்வர் பெயருக்கு ஜோதிடம் பார்க்க வேண்டும். அவர் மீண்டும் முதல்வர் ஆவாரா என, துல்லியமாக சொல்ல வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, கூண்டுக்குள் இருந்து வெளியே வந்த கிளி, முதல் சீட்டை எடுத்து கொடுத்தது. அந்த சீட்டில், சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் படங்கள் இருந்தன.

அதை பார்த்த ஜோதிடர், ''சிவன் குடும்பத்துடன் வந்துள்ளது,'' ஆசீர்வதிக்கும் விஷயமாகும். நீங்கள் கேட்டது நிச்சயம் நடக்கும். ''இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராவார். வழக்கமாக, கிளி பல சீட்டுகளை கலைத்து தான், ஒரு சீட்டை எடுக்கும். ஆனால், முதல் சீட்டிலேயே சிவன் வந்துள்ளதால், நினைத்த காரியம் நடக்கும்,'' என்றார்.

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு, குதிரை ரேக்ளா வண்டியை சிறிது துாரம் ஓட்டி சென்று, பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
16-ஜன-202118:37:53 IST Report Abuse
Sri இவர்கள் நம்பதகுந்தவர்கள் பித்தலாட்ட ரசினி சுயநலம் மற்றும் சன் டிவி யின் அடிமையாக
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202118:22:14 IST Report Abuse
Endrum Indian சிவன், பார்வதி, விநாயகர், இதன் அர்த்தம் மிக மிக தெளிவாக இருக்கின்றது. எடுபிடி சதிகாரி வெந்நீர் தான் அடுத்த அரசை ஆளப்போகின்றது.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
16-ஜன-202116:13:58 IST Report Abuse
Murthy இவர் தனக்கு பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்......இவர் செய்த செயல்களுக்கு இந்தமுறை கட்டுத்தொகை இவருக்கு கிடைக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X