கெத்து காட்டிய காளைகள்: அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு | Dinamalar

கெத்து காட்டிய காளைகள்: அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (1)
Share
பாலமேடு : கண்களில் ஆக்ரோஷம் காட்டி 'தொட்டுப் பார்' என களத்தில் கெத்துக் காட்டிய காளைகளை, நெஞ்சம் நிமிர்த்தி வீரம் காட்டி 'வந்து பார்' என அடக்கிய மாடுபிடி வீரர்களால் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு களம் அனல் பறந்தது.பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்து துவக்கினார். விழாக் குழுவினர் மற்றும் அதிகாரிகள்
 கெத்து காட்டிய காளைகள்:அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு : கண்களில் ஆக்ரோஷம் காட்டி 'தொட்டுப் பார்' என களத்தில் கெத்துக் காட்டிய காளைகளை, நெஞ்சம் நிமிர்த்தி வீரம் காட்டி 'வந்து பார்' என அடக்கிய மாடுபிடி வீரர்களால் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு களம் அனல் பறந்தது.பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்து துவக்கினார். விழாக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழியேற்றனர். 783 மாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 639 வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் எட்டு சுற்றுக்களாக தலா 75 வீரர்கள் களம் இறங்கினர்.வீரர்கள், மாடு உரிமையாளர்கள், உதவியாளர்கள் கொரோனா பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்த பின் அனுமதிக்கப்பட்டனர்.

வீரர்களுக்கு ரத்த அழுத்தம், வெப்பநிலை உள்ளிட்டவை சோதிக்கப்பட்ட பின் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.வாடிவாசலுக்குள் செல்வதற்கு முன் காளைகளுக்கும் கண், பற்கள் தன்மை, உடலில் காயங்கள் உள்ளனவா என கால்நடை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையிலான குழு பரிசோதனை செய்தது. நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் கிராமக் கோயில்களின் காளைகள் விடப்பட்டன. அவற்றை வீரர்கள் பிடிக்கவில்லை.பயிற்சி அளிக்கப்பட்ட காளைகள் அடுத்தடுத்து களம் கண்டன. கண்களை உருட்டி மிரட்டி ஆக்ரோஷம் காட்டினாலும் அஞ்சாத வீரர்கள் காளைகளை விரட்டியும், திமில்களை பாய்ந்து பிடித்தும் அடக்கினர். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 150 பேர் கொண்ட மருத்துவ குழு முகாமிட்டிருந்தது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், பைக், கார் போன்ற பரிசுகளை விழா குழுவினர் அள்ளி வழங்கினர்.ஐ.ஜி., முருகன் தலைமையில் டி.ஐ.ஜி., ராஜேந்திரன், எஸ்.பி.,க்கள் சுஜித்குமார், ராஜராஜன் மற்றும் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சிறப்பு டோக்கனால்' சர்ச்சைஅனைத்து காளைகளுக்கும் எண்கள் வழங்கப்பட்டன. களத்திற்கு முதலில் வந்தவை அடிப்படையில் அவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் அரசு அதிகாரிகள், போலீசாரிடம் 'சிறப்பு டோக்கன்கள்' பெற்ற 100க்கும் மேற்பட்ட மாடு உரிமையாளர்கள் தங்களின் மாடுகளை போலீஸ் உதவியுடன் வரிசையின் இடையில் சேர்த்து வாடிவாசலுக்கு அனுப்பினர். இதனால் திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்த வந்த காளை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் பலர் மாடுகளை களம் இறக்கமுடியாமல் திரும்பினர்.இன்ஸ்பெக்டர் உட்பட 26 பேர் காயம்மாடுகள் முட்டியதில் 25 வீரர்கள், உரிமையாளர்கள் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியனும் காயமடைந்தார்.


வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமைபாலமேட்டில் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. ராகுல், உதயநிதி ஆகியோர் ஜல்லிக்கட்டை பார்க்க வரவில்லை. அரசியல் செய்வதற்காக வந்து சென்றனர். ஜன., 30ல் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்துாரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கட்டியுள்ள கோயிலை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார் என்றார்.


இன்று அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.,16) நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 655 வீரர்கள், 700 காளைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. நேரம் காலை 8:00 - மாலை 4:00 மணி.


18 காளைகளை அடக்கிய வீரர் கார்த்தி முதலிடம்பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 674 காளைகள் பங்கேற்றன. 600 வீரர்கள் களம் இறங்கினர். 29 பேர் காயமடைந்தனர். கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதலிடம் வென்றார். அவருக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது.
பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 17 மாடுகளை அடக்கி இரண்டாம் இடம் வென்றார். இவருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வீரர்கள் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக விழா கமிட்டியிடம் புகார் கூறிய பிரபாகரன், பரிசை வாங்க மறுத்து கமிட்டியிடம் ஒப்படைத்தார்.மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பெற்றார். அவருக்கு கோப்பை பரிசு வழங்கப்பட்டது.


காளைக்கு கன்றுடன் பசு பரிசுசிறந்த காளையாக பாலமேடு யாதவ உறவின்முறைக்கு சொந்தமான மாடு தேர்வு செய்யப்பட்டது. இந்த காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் பசு பரிசு அளிக்கப்பட்டது.
இரண்டாவது பரிசு வத்திராயிருப்பை சேர்ந்த காளிமுத்துவின் மாடு பெற்றது. இதற்கு ஒரு பவுன் தங்க காசு பரிசு வழங்கப்பட்டது. சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வீரபாண்டியின் காளை மூன்றாம் பரிசு வென்றது. கோப்பை பரிசளிக்கப்பட்டது.முதலிடம் வென்ற பாலமேடு கோயில் காளையை மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று உற்சாகப்படுத்தி கோயிலில் விட்டனர்.


பரிசை மறுத்த வீரர்ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்தி, கூறுகையில், கடந்த ஆண்டு இரண்டாம் பரிசு வாங்கினேன். தற்போது கார் பரிசாக வாங்கியது மகிழ்ச்சி. என் வெற்றியில் நண்பர்களின் பங்கு அதிகம், உடல் சோர்வடைந்த போது, ஊக்கம் தந்து காளைகளை பிடிக்க வைத்தனர். மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், என்றார்.
இரண்டாம் பரிசு பொதும்பு பிரபாகாரன்: ஒவ்வொரு பேட்ஜ் முடிந்த பிறகு, மாடுபிடி வீரரின் எண் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கையை முறையாக அறிவிக்கவில்லை. கடந்த முறை முதல் பரிசாக கார் வாங்கினேன் என்பதால் காளையை குறைத்து சொல்கின்றனர். இதனால் இந்த பரிசு வேண்டாம், அதை கமிட்டியே வைத்து கொள்ளட்டும், என்றார்.

18 காளையை அடக்கியவருக்கு பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில், மதுரை, கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதலிடம் வென்றார். அவருக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது. பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 17 காளைகளை அடக்கி, இரண்டாம் இடம் வென்றார். இவருக்கு ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், வீரர்கள் தேர்வில் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாக விழா கமிட்டியிடம் புகார் கூறிய பிரபாகரன், பரிசை வாங்க மறுத்து கமிட்டியிடம் ஒப்படைத்தார். மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பெற்றார். அவருக்கு கோப்பை பரிசு வழங்கப்பட்டது.


காளைக்கு கன்று, பசு பரிசுசிறந்த காளையாக, பாலமேடு யாதவ உறவின்முறைக்கு சொந்தமான மாடு தேர்வு செய்யப்பட்டது. இந்த காளைக்கு, கன்றுடன் கூடிய காங்கேயம் பசு பரிசாக அளிக்கப்பட்டது. முதலிடம் வென்ற காளையை, மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று, கோவிலில் விட்டனர்.

இன்று அலங்காநல்லுார்

உலகப் புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர்.'டோக்கன்'கள் விற்பனைஉரிமையாளர் குற்றச்சாட்டுஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வருவாய்த் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சார்பில், இந்தாண்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுக்காகவே காளை வளர்க்கும் பலருக்கு டோக்கன் கிடைக்கவில்லை.இது குறித்து, காளை உரிமையாளரான மதுரை, அண்ணாநகர் பிரேம் கூறியதாவது:நான் வளர்ப்பது, தஞ்சை நாட்டின் குட்டைமாடு இனம். இதன் விலை, 7.20 லட்சம் ரூபாய். தாத்தா காலத்தில் இருந்து, ஜல்லிக்கட்டிற்காக மாடு வளர்க்கிறோம்.

இந்தாண்டு, அலங்காநல்லுார் மற்றும் பாலமேட்டில் பங்கேற்க, மாடுகளுக்கு டோக்கன் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. கடைசி நேரத்தில், 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இரண்டு டோக்கன்கள் வாங்கி, என் மாடுகளை பாலமேட்டில் களம் இறக்கி, பரிசுகள் வென்றுள்ளேன். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பின், டோக்கன் வழங்கும் முறை, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தங்களுக்கு வேண்டிய ஆட்களுக்கு வழங்குகின்றனர். சிலர் விற்பனை செய்கின்றனர். டோக்கன் வழங்கும் முறையை, மீண்டும் விழா குழுவினரிடமே ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X