வாஷிங்டன்: வரும், 20ம் தேதி நடக்கவுள்ள, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர்கள், லேடி காகா மற்றும் ஜெனிபர் லோபஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், 78, மற்றும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், 56, ஆகியோர், வரும், 20ல் பதவி ஏற்கின்றனர். அமெரிக்க பார்லிமென்டான, 'கேப்பிடோல்' கட்டடத்தில், வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிபர் பதவி ஏற்பு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சமீபத்தில் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டம் காரணமாக, பதவி ஏற்பு நிகழ்ச்சியில், மிக குறைந்த அழைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.'ஆன்லைன்' வாயிலாக, விழாவை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவி ஏற்பு நிகழ்வு தினத்தில், வாஷிங்டனில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், 10 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், 5,000 வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட உள்ளனர்.90 நிமிடங்கள்புதிய அதிபரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியை, டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பங்கேற்காத பட்சத்தில், 1869க்கு பின், புதிய அதிபரை வரவேற்க தவறிய அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெறுவார்.பதவி ஏற்பு நிகழ்ச்சியில், பிரபல பாப் இசைக் கலைஞர் லேடி காகா, அமெரிக்க தேசிய கீதத்தை பாட உள்ளார்.
அதைத் தொடர்ந்து, பாப் இசைக் கலைஞர் ஜெனிபர் லோபசின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ் தொகுத்து வழங்கும், நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. 'செலிபிரேட்டிங் அமெரிக்கா' என்ற தலைப்பில், 90 நிமிடங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி, அமெரிக்க 'டிவி'க்களில், நேரலையில் ஒளிபரப்பாகின்றன.இதில், பிரபல இசைக்கலைஞர்கள், ஜான் பான் ஜோவி, டெமி லொவாட்டோ, ஜஸ்டின் டிம்பர்லேக், ஆன்ட் க்ளிமான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முந்தைய தினமான, 19ம் தேதியன்று, 14 சிம்பொனி இசைக்குழுக்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து, மாபெரும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றனர். 142 லட்சம் கோடி ரூபாய்இதில், அட்லான்டா, சிகாகோ, டல்லஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட, 14 சிம்பொனி இசைக்குழுக்கள் பங்கேற்கின்றன. அதில், ஒரு இசைக் குழுவாக, தெற்காசிய சிம்பொனி இசைக்குழுவும் இடம் பெற்றுள்ளது.
அக்குழுவின் சார்பில், இலங்கையைச் சேர்ந்த பெண் இசைக் கலைஞர் நிவந்தி கருணரத்னே பங்கேற்கிறார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அமெரிக்கர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு நேரடி நிதி உதவி செய்யவும் 142 லட்சம் கோடி ரூபாய் உதவி தொகையை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அதிபர் ஜோ பைடன் நேற்று முன் தினம் அறிவித்தார்.

அமெரிக்க பார்லிமென்டிற்குள் நுழைந்து, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், கடந்த, 6ம் தேதி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் பலியாகினர். வன்முறையில் ஈடுபட்ட, 100 பேரை அடையாளம் கண்டு, போலீசார் கைது செய்துள்ளனர். புதிய அதிபர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், சந்தேகத்திற்கு இடமான ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்களை, போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE