சுயமரியாதையை சீண்டினால் பதிலடி தருவோம்: ராஜ்நாத்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
பெங்களூரு :''நாட்டின் சுயமரியாதைக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் வல்லரசு நாடுகளுக்கு தகுந்த பதிலடி தர நம் வீரர்கள் தயாராக உள்ளனர்'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ஆயுதப்படை வீரர்கள் தினமான நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் விமானப்படைக்கு 48 ஆயிரம்
சுயமரியாதையை சீண்டினால் பதிலடி தருவோம்: ராஜ்நாத்

பெங்களூரு :''நாட்டின் சுயமரியாதைக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் வல்லரசு நாடுகளுக்கு தகுந்த பதிலடி தர நம் வீரர்கள் தயாராக உள்ளனர்'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ஆயுதப்படை வீரர்கள் தினமான நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் விமானப்படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 83 அதிநவீன இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news



இது நம் விமானப்படையின் திறனை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும். மேலும் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும்.எந்த நாட்டுடனும் சண்டையிட இந்தியா விரும்பவில்லை. அமைதி மற்றும் நட்புறவு நம் ரத்தத்திலும் கலாசாரத்திலும் ஊறியுள்ளது.நாம் எப்போதும் போரை விரும்பியதில்லை. ஆனால் நமசுயமரியாதைக்கு ஊறுவிளைக்க நினைக்கும் வல்லரசு நாடுகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி தர நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
16-ஜன-202113:14:48 IST Report Abuse
Raj முதலில் நாட்டில் மத நல்லிணக்கம் ஏற்படட்டும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202113:07:47 IST Report Abuse
Malick Raja வடிவேலு காமெடியில் சொல்வார் .. அடிக்கிறவினாலெல்லாம் அடிச்சுக்க என்றவன் அடிவாங்கி ..அதெல்லாம் ஒண்ணுமில்ல. இதெல்லாம் சகஜமப்பா .. என்ற கதையில் சொல்லி பின் விளைவுகள் எல்லாம் வெளியில் சொல்லாமலேயே .. நம்மை யாரும் அடிக்க முடியாது என்று வெளியில் கூவுவதும் ஒருவகை திறமை என்று இவரின் நினைப்பு ..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
16-ஜன-202116:52:13 IST Report Abuse
Dr. Suriyaஎப்படி இந்தியா உள்ளே புகுந்து அடிக்கவே இல்லைன்னு சொல்லிட்டு... இப்போ கடந்த 70 வருசமா இருந்த இந்தியா இப்போ இல்லை.. 6 வருசமா ரொம்ப வலிமையா இருக்குன்னு உங்க இம்ரான் சொன்ன மாதிரியா.......
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஜன-202117:06:01 IST Report Abuse
கொக்கி குமாரு மாலிக் ராசா, சமீபத்தில் இம்ரான்கான் இந்தியா 73 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலமாக உள்ளது என்றும், ஒரு அமைச்சர் பால்கோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் இறந்தனர் என்றும் சொன்னார்களே, அது பொய்யா? தங்களை போன்று நாங்கள் மதம் பார்பபதில்லை. இந்தியா தவிர எங்கு சென்றாலும் தாங்கள் அமைதியாக வாழ இயலாது. அவ்வளவு ஏன், தாங்கள் இருக்கும் சவுதி அரேபியா ஒரு முஸ்லீம் அகதிகளை கூட ஏற்கவில்லை. கொஞ்சமாவது தாய்நாட்டுப்பற்றுடன் இருக்கவும்....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202117:33:54 IST Report Abuse
Malick Rajaதீய எண்ணம் தீவினை செய்யும் .. அதில் மாறவாய்ப்பே இல்லை ....
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்இம்ரான் சொன்னது சிலேடையாக நக்கலாகவும் இருக்கலாம் பிங்கர் 4 - 8 யாரிடம் உள்ளது அதென்ன புதுசா லைன் ஆப் ஆக்ச்சுவல் கண்ட்ரோல் LOC? பன்னாட்டு எல்லைக் கொடுங்கறது எங்கே போனது "உள்ளே புகுந்து அடிக்கவே இல்லைன்னு சொல்லிட்டு... " இத நாம கூட ஒருநாள் சொன்னோம்ல 'இப்போ பிரச்சினைக்கு தீர்வு அத்தனை சுலபமில்ல"ன்னு சொல்றோம்ல அந்த கூலிங் கிளாஸை கழட்டுங்க டாக்டர்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
16-ஜன-202111:11:20 IST Report Abuse
Ellamman பதிலடி தருவதற்கு முன்னர் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் சொல்லிவிட்டு தான் பதிலடி தருவோம்
Rate this:
16-ஜன-202114:11:36 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉளறல்...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
16-ஜன-202115:20:43 IST Report Abuse
Ellammanஉங்களுக்கு புரியவில்லையென்றால் நான் எப்படி பொறுப்பாவேன்?? அர்னாப் கோஸ்வாமி குறித்த இன்றைய செய்தி படியுங்கள்... அரணாபுக்கும் பீ ஜெ பீ க்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்ளுங்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X