பொது செய்தி

தமிழ்நாடு

உலக தரத்திற்கு அடர்வனம் அமைக்கும் பணி

Added : ஜன 16, 2021
Share
Advertisement
ஓ.எம்.ஆரில் உள்ள, மூன்று மேம்பால ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 2 கி.மீ., நீளத்தில் நடைபாதை, சைக்கிள் பாதை மற்றும் அடர்வனம் அமைக்கும் பணி, 20 கோடியில் நடைபெறுகிறது.ஓ.எம்.ஆர்., கஸ்துாரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர் ஆகிய மூன்று மேம்பால ரயில் நிலையங்களின் துாண்கள், பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளது.மூன்று நிலையங்களின் துாரம், 2 கி.மீ., கொண்டது.
 உலக தரத்திற்கு அடர்வனம் அமைக்கும் பணி

ஓ.எம்.ஆரில் உள்ள, மூன்று மேம்பால ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 2 கி.மீ., நீளத்தில் நடைபாதை, சைக்கிள் பாதை மற்றும் அடர்வனம் அமைக்கும் பணி, 20 கோடியில் நடைபெறுகிறது.

ஓ.எம்.ஆர்., கஸ்துாரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர் ஆகிய மூன்று மேம்பால ரயில் நிலையங்களின் துாண்கள், பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளது.மூன்று நிலையங்களின் துாரம், 2 கி.மீ., கொண்டது. கால்வாயின், கிழக்கு திசையில், 30 முதல், 50 அடி அகலம் வரை, காலி இடம் உள்ளது.

கால்வாயின், மேற்கு திசையில், ரயில் தண்டவாள துாண்கள் கீழ் பகுதியில், 30 அடி அகல காலி இடம் உள்ளது. இந்த இடங்களில், ஆக்கிரமிப்பு மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்பட்டன.இந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கஸ்துாரிபாய் நகர் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை, 2 கி.மீ., துாரத்தை மேம்படுத்த, மாநகராட்சி, 20 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இதில், நடைபாதை, சைக்கிள் பாதை, 'மியாவகி' என்ற அடர்வனம், சிறுவர் பூங்கா, இருக்கை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைய உள்ளது.தற்போது, மண் சமப்படுத்தும் பணி நடக்கிறது. ஓராண்டுக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதியை மேம்படுத்தி, உலக தரத்தில், நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா அமைய உள்ளது. மூன்று ரயில் நிலையங்களை ஒருங்கிணைத்து பணி நடப்பதால், இந்த ரயில் நிலையங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடர்வனம் மரங்கள் வளரும்போது, இந்த பகுதியின் பசுமை அதிகரிக்கும்.மாநகராட்சி அதிகாரிகள்.

எப்படி அமையும்?

 பக்கிங்ஹாம் கால்வாய் 30 அடி அகலம் கொண்டது கால்வாயின், கிழக்கு திசையில், 12 அடி அகல நடைபாதை, 12 அடி அகல சைக்கிள் பாதை மற்றும் மீதமுள்ள இடத்தில், 'மியாவகி' என்ற அடர்வனம் அமைய உள்ளது கால்வாயின், மேற்கு திசையில், தண்டவாள துாண்கள் கீழ் பகுதியில், நடைபாதை, சிறுவர் பூங்கா, செயற்கை நீரூற்று, வண்ண விளக்குகள், ஓவியங்கள், சிமென்ட் இருக்கை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள் அமைய உள்ளது

 அடர்வனம், 2 கி.மீ., நீளம், 25 முதல், 35 அடி அகலம் வரை அமைய உள்ளது. மூன்று அடி சதுர பரப்பளவில், மூன்று வகையான மரக்கன்றுகள் நடப்படும். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதால், ஓரிரு ஆண்டில் வளர்ந்து, பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் திருவான்மியூர், அடையாறு, கோட்டூர்புரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாலையை தவிர்த்து, நெரிசல் இல்லாமல் சைக்கிள் பாதையில் பயணிக்க முடியும்.

-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X