இந்திய நிகழ்வுகள்
கர்நாடகாவில் கோர விபத்து; பெண் டாக்டர் உட்பட 13 பேர் பலி
தார்வாட்: கோவாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த 'டெம்போ டிராவலர்ஸ்' வேன் மீது, டிப்பர் லாரி மோதியதில், பெண் டாக்டர் உட்பட, 13 பேர் உயிர்இழந்தனர்.
ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை
சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை பகுதியில், நேற்று முன்தினம், சந்தேகப்படும் வகையிலான நடமாட்டம் அதிகமிருந்தது.அப்போது, நம் நாட்டு எல்லைக்குள் அத்து மீறி ஊடுருவ முயன்ற ஒருவரை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
முன்னாள் அமைச்சரிடம் விசாரணை
மும்பை: மஹாராஷ்டிராவில், 2016ல், பா.ஜ., அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் காட்சே, 68, நில மோசடி வழக்கில் சிக்கினார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில் அவர், நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
9 பேருக்கு பாலியல் தொந்தரவு
ஜலான்: உத்தர பிரதேசத்தின் கோன்ச் பகுதி யில் முன்னாள், பா.ஜ., துணைத் தலைவர் ராம் பிஹாரி ரத்தோர், இரு சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்ததாக, சில தினங்களுக்கு முன் கைதானார். அவரிடம் போலீசார் கைப்பற்றிய, 'லேப்டாப், டிவிடி' வாயிலாக, மேலும் இரு பெண்கள் மற்றும் ஏழு சிறுமியரை, பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியது உறுதியானது. அவர்களிடம் புகார் பெறும் நடவடிக்கைகளை, போலீசார் துவங்கியுள்ளனர்
சிறுமி பலாத்காரம்: 4 பேர் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில், பள்ளி காவலராக பணியாற்றும் நேபாளத்தைச் சேர்ந்த உப்ரேதா குமார், 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, 13 மாதங்கள் வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், விபசாரத்திலும் ஈடுபடுத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, உப்ரேதா குமார் உட்பட நால்வரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தமிழக நிகழ்வுகள்
250 மதுபாட்டில்கள்பறிமுதல்: 2 பேர் கைது
திருவாடானை: தொண்டி எஸ்.ஐ. சித்தன், எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். திருவெற்றியூர் பகுதியில் டூவீலரில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த நெடுஞ்செழியன் 42, என்பவரை கைது செய்து, 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிறுகம்பையூர் விலக்கு ரோட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் பேயாடிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் 45, என்பவரை கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காஸ் கசிவு; விபத்து தவிர்ப்பு
திருவாடானை; தொண்டி அருகே அனிஷ்நகரை சேர்ந்தவர் செல்வராணி 35. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சமையல் செய்ய முயன்ற போது சிலிண்டரிலிருந்து காஸ் கசிந்திருப்பதை அறிந்தார். கதவை பூட்டிவிட்டு திருவாடானை தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள் ஜன்னல் கதவுகளை திறந்து சிலிண்டரை பாதுகாப்புடன் எடுத்து சரி செய்தனர்.
டூ விலர் மரத்தில் மோதி இருவர் பலி
ராமநாதபுரத்தில் டூவீலர் புளிய மரத்தில் மோதியதில் பால்பாண்டி 25, மோகன் 25, சம்பவ இடத்தில் பலியாகினர்.ராமநாதபுரம் கேணிக்கரை தாயுமானவர் சுவாமி கோயில் தெருவை சேர்ந்த மாரி மகன் பால்பாண்டி. தனியார் வங்கியில் விற்பனை மேலாளர். இவரது நண்பர் லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகன் மகன் மோகன். மீன் விற்பனை செய்யும் தொழிலாளி.இருவரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் பேராவூர் நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். பால்பாண்டி ஓட்டினார். இருவரும் ெஹல்மெட் அணியவில்லை.சின்னமாரியம்மன் கோயில் அருகே ரோட்டோர புளியமரத்தில் பைக் மோதியது. இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை
பல்லடம்:மனைவியை கத்தியால் குத்திய கணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 35. காய்கறி வண்டி ஓட்டி வேலை பார்க்கிறார். மனைவி பானுப்பிரியா, 30. குடும்ப பிரச்சனை காரணமாக, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.கடந்த, 13ல் ஏற்பட்ட தகராறில், பானுப்பிரியாவை சங்கர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். படுகாயங்களுடன் பானுப்பிரியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த சங்கரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சாணிப்பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது
விருத்தாசலம் : கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் நேற்று குப்பநத்தம் புறவழிச்சாலை, ஆயில்மில் தெரு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மது பாட்டில்கள் விற்ற வி.குமாரமங்கலம் சோமசுந்தரம், 33; வயலுார் பழனிவேல், 37; ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 16 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

உலக நிகழ்வுகள்
மகள் மாமியாரை சுட்டு இந்தியர் தற்கொலை
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகணத்தில் உள்ள அல்பேனி நகரை சேர்ந்தவர் பூபிந்தர் சிங் 57. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் தன் 14 வயது மகள் மற்றும் மாமியாரை கடந்த 13ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். படுகொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
டெர்ரி ஹாட்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் என்ற இடத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த காரி ஜான்சன் உள்ளிட்ட மூன்று பேர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 45 நாட்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காரி ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மற்ற இருவருக்கு சமீபத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. காரி ஜான்சன் குணமடைந்த நிலையில் அவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE