ஜன.,16: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,16: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021
Share
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,16), பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது. இதன்

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,16), பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது. இதன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.40 ரூபாய், டீசல் லிட்டர் 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்று மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X