அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளைக்கு கார் பரிசு

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை முடிவடைந்தது. சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8
Alanganallur, Jallikattu, Madurai, TamilnaduCM, EPS, Palanisamy, Pannerselvam, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு, மதுரை, முதல்வர், பழனிசாமி, பன்னீர்செல்வம்

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை முடிவடைந்தது. சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்றன.


உலக புகழ் பெற்ற, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முனியாண்டி கோயில் காளைக்கு இருவரும் மரியாதை செய்து அவிழ்த்து விட்டனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின் போட்டியில் இறங்கினர். அலங்காநல்லூரில், 655 காளைகள் பங்கேற்கின்றன. 700 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார். தங்ககாசு, சைக்கிள், பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கும் கார் பரிசாக கிடைக்கும்.

latest tamil newsமுன்னதாக அலங்காநல்லூரில் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். பின்னர், மதுரை கலெக்டர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் ஏற்றனர்.12 காளைகளை பிடித்த மதுரை, விராட்டிப்பத்துவை சேர்ந்த கண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசும், 9 காளைகளை பிடித்த கருப்பணன் என்பவருக்கு 2வது பரிசும், 8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3 வது பரிசும் வழங்கப்பட்டது. குருவித்துறையை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை முதல் பரிசை தட்டி சென்றது.Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஒரு முதல்வரின் வேலையா இது!! எத்தனையெத்தனை வேலைகள்! மக்கள் பஞ்சம் பசி பட்டினி குரானா நோய்என்று செத்துக் கொண்டிருக்க! இரு முதல்வர்களும் வந்து ஜாலியாக ஜல்லிக் கட்டை திறந்து வைக்கிறார்கள். !!. எல்லாம் மரத் தமிழன் தலைவிதி!! .
Rate this:
அருணாசலம், சென்னைசுடலை கூடத்தான் பொங்கல் பானை வைச்சான்?...
Rate this:
Suresh Pandian - Madurai,யூ.எஸ்.ஏ
16-ஜன-202119:59:11 IST Report Abuse
Suresh PandianAthuvum yeriyaatha adupil...
Rate this:
Sivakumar - Permbalur,கத்தார்
16-ஜன-202121:11:32 IST Report Abuse
Sivakumar சுடலை யாரு உன் அப்பநாடா எருமை,...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202112:48:56 IST Report Abuse
Malick Raja தன்மானம் காத்த சிங்கங்கள் இரெண்டும் ஒன்றாக .. அடேங்கப்பா .. சுயமரியாதையின் முன்னுதாரணங்கள் .. அடடா ?
Rate this:
அருணாசலம், சென்னைஎது ராகுலும் உதவாநிதியுமா?...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202111:25:50 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரசின் கருத்து 2016 தேர்தல் அறிக்கையில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என்று கூறியிருந்தது நாங்கள் கஷ்டப்பட்டு தடை செய்த காட்டுமிராண்டி விளையாட்டை பாஜக அரசு சட்டப்பூர்வமாக்கிவிட்டது (சொன்னது ஜெய்ராம் ரமேஷ்) கோர்ட்டின் வார்த்தைகளை மீறி ஜல்லிக்கட்டு அனுமதிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது ( (சொன்னவர் அபிஷேக் சிங்வி) ஜல்லிக்கட்டுக்கு எதிராக ராகுலின் ஆலோசனையின் பேரில் கோர்ட்டில் ஆஜரானவர் அபீஷேக் மனு சிங்கவி .இப்போ என்னவோ தமிழ்ப் பண்பாட்டை காக்கிறோம் என ராகுல் நாடகமாடுவது தமிழர்களை ஏமாற்ற
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
16-ஜன-202114:10:04 IST Report Abuse
தமிழன்நீங்க வருத்தப்படறது மாட்டுக்காகவா? இல்லே மனிதனுக்காகவா? இல்லே பிஜேபி ய எதிர்த்து போராடி தமிழர்கள் வெற்றிபெற்றோமே அதுக்காகவா?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
16-ஜன-202116:09:13 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANதமிழன் என்ற பெயர் தாங்கியவனே உன் கூட்டம் வருத்தப்பட்டது மாட்டுக்காகவா? இல்லே மனிதனுக்காகவா? அல்லது தடையை மீறி தமிழர்கள் போராடி வென்றார்களே அதுக்காகவா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X