அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளைக்கு கார் பரிசு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளைக்கு கார் பரிசு

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (12)
Share
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை முடிவடைந்தது. சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8
Alanganallur, Jallikattu, Madurai, TamilnaduCM, EPS, Palanisamy, Pannerselvam, அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு, மதுரை, முதல்வர், பழனிசாமி, பன்னீர்செல்வம்

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை முடிவடைந்தது. சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்றன.


latest tamil news


முன்னதாக அலங்காநல்லூரில் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். பின்னர், மதுரை கலெக்டர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் ஏற்றனர்.



12 காளைகளை பிடித்த மதுரை, விராட்டிப்பத்துவை சேர்ந்த கண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசும், 9 காளைகளை பிடித்த கருப்பணன் என்பவருக்கு 2வது பரிசும், 8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3 வது பரிசும் வழங்கப்பட்டது. குருவித்துறையை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை முதல் பரிசை தட்டி சென்றது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X