பீஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு சீனாவின் வூஹான் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் தற்போது ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிச்சாலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், உடனடியாக அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஐஸ் கிரீம் தொழிற்சாலை மூடப்பட்டு அங்குள்ள பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதிய கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE