
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டின் இரண்டாம் நாளாக பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளைகள் பல வீரர்களை பக்கத்தில் நெருங்கவிடாமல் முட்டி பந்தாடிய காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

கொரோனா காரணமாக எந்தவித சந்தோஷத்திலும் ஈடுபடாமல் முடங்கிக்கிடந்த மக்களுக்கு முதல் சந்தோஷமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

காளைகளும்,வீரர்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் கலந்து கொண்டனர் பாலமேடு ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடந்துவரும் ஜல்லிகட்டு என்பதுடன் வைகை ஆற்றில் நடப்பதால் பார்வையாளர்கள் அதிகம் பேர் இங்குதான் பார்த்து ரசிக்க முடியும்.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இருப்பது அவசியம் என்பதால் இப்போதெல்லாம் வீரர்கள் பகுதி பகுதியாக சீருடை கொடுத்து அனுப்பப்படுகின்றனர்.

பாலமேட்டு ஜல்லிக்கட்டில் வீரர்களை விட ஜல்லிக்கட்டு காளைகளே அதிகம் வென்றன பார்க்கலாம் இன்று அலங்கநல்லுாரில் நமது வீராதிவீரர்களின் செயல்திறனை.

படங்கள்:எம்.கண்ணன்,ஆர்.அருண் முருகன்.
தொகுப்பு:எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE