பொது செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவருக்கு முதல் தடுப்பூசி

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில், முதல் ஆளாக, அந்த மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை, முதல்வர் பழனிசாமி மதுரையில் துவக்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்
Apollo, CoronaVaccine, Chennai, Covid, சென்னை, அப்பல்லோ, கொரோனா, தடுப்பூசி, பிரதாப் சி ரெட்டி

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில், முதல் ஆளாக, அந்த மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை, முதல்வர் பழனிசாமி மதுரையில் துவக்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல் தடுப்பூசியை, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் 12 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 10 அரசு மருத்துவமனைகளிலும் 2 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்காதீங்க! அப்போலோ தலைவர் வேண்டுகோள்


latest tamil news


சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை, அப்பல்லோ மருத்துவமனையின் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, துவக்கி வைத்து, முதல் நபராக தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.


அச்சப்பட வேண்டாம்

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மிகவும் நல்லது. அனைவரும் போட வேண்டும். யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambal Guru - CHENNAI,இந்தியா
16-ஜன-202122:49:32 IST Report Abuse
Ambal Guru ஐயா தயவுசெய்து நம் ப்ரதாமரையும் முதல்வரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி மக்களிடம் நம்பிக்கை ஊட்ட வேண்டும் . செய்வார்களா.??
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
16-ஜன-202119:47:24 IST Report Abuse
sahayadhas ஐயா, ஏன் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை.
Rate this:
Cancel
16-ஜன-202116:34:27 IST Report Abuse
ஆப்பு பாராட்டுக்கள். வாயால் வடை சுடுபவர் பேச்சை விட உங்கள் செயலை நம்புகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X