பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவை தடுக்கும் பொருட்டு இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று(ஜன., 16) துவங்கியது. இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனா நோய் தாக்கி ஓராண்டாகிவிட்டது. இன்னும் இது முழுமையாக தீரவில்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த தொடங்கி உள்ளனர். இந்தியாவில் சில
LargestVaccineDrive, vaccinationCovid, CongratulationsIndia, AIIMS,

புதுடில்லி : கொரோனாவை தடுக்கும் பொருட்டு இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று(ஜன., 16) துவங்கியது. இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கொரோனா நோய் தாக்கி ஓராண்டாகிவிட்டது. இன்னும் இது முழுமையாக தீரவில்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த தொடங்கி உள்ளனர். இந்தியாவில் சில வாரங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடந்தது. 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' ஆகிய தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்கியது.


latest tamil news




இந்தியாவில் உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்தார். இதில் பேசிய மோடி, ''சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், டாக்டர்களுக்கு பாராட்டு. கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது'' என்றார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் முதலாவதாக, தூய்மை பணியாளருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த டாக்டர் உள்ளிட்ட பிறர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேப்போன்று நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. தமிழ்நாட்டில் மதுரையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர். முன்னதாக பல ஊர்களில் கொரோனா தடுப்பூசி மருந்து உள்ள பெட்டகத்திற்கு பூஜை செய்த நிகழ்வுகள், தடுப்பூசி வருகையை பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வுகளும் நடந்தன.


latest tamil news




கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் இதை வரவேற்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ''தடுப்பூசியால் கொரோனா நோய் மீதான மக்கள் கொண்ட அச்சம் சற்றே விலக தொடங்கியது உள்ளது'', ''வரலாற்றில் இன்று முக்கியமான நாள், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வாழ்த்துக்கள்'', ''இதை சாத்தியமாக்கிய அனைத்து டாக்டர்கள், இரவு பகலாக வேலை பார்த்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி'', ''கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இன்று இந்தியாவுக்கு முக்கியமான மைக்கல் தினம், வாழ்த்துக்கள் இந்தியா. இதை சாத்தியமாக்கி பிரதமர் மோடிக்கு நன்றி'' என பலரும் தங்களது மகிகழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் டுவிட்டர் வாயிலாக தெரிவிதது வருகின்றனர். இதன் காரணமாக டுவிட்டரில் #LargestVaccineDrive, #vaccinationCovid, #CongratulationsIndia, #AIIMS, #Scientists, #PMShri உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகளில் இந்த விஷயம் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202105:20:20 IST Report Abuse
J.V. Iyer அருமை..அருமை. இதை கொண்டாடுவோம்.இதன் பலனை சீக்கிரம் பார்க்கலாம்.
Rate this:
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
16-ஜன-202119:09:11 IST Report Abuse
ravichandran அப்பிடியே இந்த 52 நாட்களை வேஸ்ட் பண்ணிட்டு கிடக்கிறாங்களே அந்த ஆட்களை தலைல தட்டி கொஞ்சம் கூட்டி கொண்டு போய் அந்த பக்கம் விட்டுடுங்க சாமியோ
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
16-ஜன-202117:18:07 IST Report Abuse
தத்வமசி கொரோனாவை உலகுக்கு கொடுத்த சீனாவின் கோவித் தடுப்பு மருந்து பயனற்றுவிட்டது. சீனாவிடம் வாங்க ஒப்புக்கொண்ட பிரேசில் முதலிய நாடுகள் இப்போது இந்தியாவிடம் வாங்குகிறது. நமது மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X