ராமர் கோயிலுக்கு ரூ.1,11,11,111 நிதி வழங்கிய உ.பி.,பிரமுகர்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,11,11,111 (1.11 கோடி) தொகையை உத்தரப் பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ., நன்கொடையாக அளித்தார்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் ஜனாதிபதி
FormerUP_MLA, Donates, RamTemple, Construction, 1Crore, உபி, எம்எல்ஏ, ராமர் கோயில், நன்கொடை

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,11,11,111 (1.11 கோடி) தொகையை உத்தரப் பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ., நன்கொடையாக அளித்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடமிருந்து 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர பகதூர் சிங், கோயில் கட்டுமானத்திற்கான தனது பங்களிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான (ரூ.1,11,11,111) காசோலையை வழங்கினார்.


latest tamil news



மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ,குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநில கவர்னர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar G - kuwait,குவைத்
17-ஜன-202107:30:50 IST Report Abuse
Shankar G இங்கே அல்லலூயா குரூப் கதருறத பார்த்த ரொம்ப சந்தோஷமா இருக்கு . கிருஷ்ணனை பார்த்து கிறிஸ்துன்னு ஒன்னை கண்டுபிடிச்சு இந்தியாவை கெடுக்க வந்து இருக்கானுக. நாங்க ராமர் கோவில் கட்டின எந்த மற்ற மத காரனுக கேட்க உரிமையில்லை முடித்து போகவும் ..........
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202105:16:39 IST Report Abuse
J.V. Iyer துர்கா சுடலை கொடுத்தாரா? கணவர் தோற்க அள்ளிவிட்டிருப்பார்.
Rate this:
Cancel
Indian - Vellore,இந்தியா
16-ஜன-202120:28:31 IST Report Abuse
Indian படேல் சிலைக்கே மூன்றாயிரம் கோடி செலவு செய்த இந்த அரசு என் ராமர் கோயிலையும் அரசு செலவிலேயே கட்டக்கூடாது கேள்வி கேட்க யாருக்கு தைரியம் இருக்கு?
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஜன-202122:34:22 IST Report Abuse
கொக்கி குமாரு பல பாகங்களாக சிதைந்து கிடந்த பழைய இந்தியா இன்று ஒன்றுபட்ட இந்தியாவாக இருப்பதற்கு முழு முதற் காரணம் படேல். இரும்பு மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். அவரது புகழை காங்கிரஸ் முழுதும் மறைத்துவிட்டு நேரு,காந்தியின் புகழை பாடி தங்கள் குடும்பத்தை வளர்த்துக்கொண்டார்கள். அதனால் பாஜக படேல் புகழை சிலை மூலம் மீட்டெடுத்தது. நமக்கு எப்படி திருவள்ளுவரோ, அப்படி இந்தியாவிற்கு படேல். நமது வருங்கால சந்ததியினருக்கு உண்மையான வரலாறை கொண்டு செல்வதில் தவறில்லை. படேல் சிலை வைக்கப்பட்டது சரியே. கோவில் அப்படியில்லை. எல்லோருடைய பங்கும் இருந்து எல்லோருக்கும் புண்ணியம் கிடைக்கவேண்டும் என்று எல்லோரிடமும் நன்கொடை வாங்கப்படுகிறது. அரசு செலவில் கட்டினால், மூர்க்கனுங்களும், மதம் மாற்றும் கும்பலும் சும்மாவா இருப்பானுங்க....
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
17-ஜன-202110:41:33 IST Report Abuse
Sridharan Venkatramanவேலூர் இந்தியன் போல விதண்டாவாதிகளுக்கு விளக்கம் சொல்லிப் பயனில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X