அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை : மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள், தொடர்ச்சியாக பெய்த மார்கழி மழையில் அடியோடு மூழ்கி பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவருக்கும்
Stalin, M.k.stalin, Dmkchiefstalin, DMKStalin, Dmk, DmkchiefM.k.stalin, மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், திமுகஸ்டாலின், திமுகதலைவர்ஸ்டாலின்,  திமுகதலைவர்மு.க.ஸ்டாலின்,

சென்னை : மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள், தொடர்ச்சியாக பெய்த மார்கழி மழையில் அடியோடு மூழ்கி பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவருக்கும் பெருந்துயரத்திற்கும், பேரிழப்பிற்கும உள்ளாகியிருப்பது கவலையளிக்கிறது. நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த மழை பேரடியாக வந்துள்ளது. இதனை அதிமுக அரசு உரிய முறையில் அணுகுவதாக தெரியவில்லை. நிவாரணம் வழங்குவதில் அதிமுக அரசு கோட்டை விட்டு தூங்குகிறது


latest tamil news


நிவர் புயல் பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. வேளாண் நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரையும், அதில் மூழ்கியுள்ளல அறுவடை செய்ய முடியாத நெற் பயிர்களை பார்த்து விவசாயிகள் கண்கலங்கியுள்ளதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க்காப்பீட்டு தொகையையும் எவ்வித தாமதமின்றி கிடைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
17-ஜன-202109:59:44 IST Report Abuse
Hari கூட்டுறவூ சங்கங்களை கொள்ளை அடித்து அதை இயங்காமல் செய்தவனெல்லாம் எப்படியா விவசாயிகளை காக்க முடியும் . இவர்கள் இருக்கும்வரை நாட்டில் நல்லது நடக்கவிடமாட்டார்கள். விஷக்கிருமிகளை களை எடுக்கணும்.
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
17-ஜன-202109:20:20 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் இதே இடங்களில் வருடா வருடம் மழை பெய்து பயிர்கள் அழுகுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த கழகங்களும் ஒரு சில விவசாயிகளுக்கு, பெயரளவில் நிவாரணம் கொடுப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று படுத்துக்கொள்கின்றன. பெரும் மழை காலங்களில், நீரை வடிய விட ஏதாவது திட்டம் தீட்டினார்களா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-ஜன-202108:36:49 IST Report Abuse
RajanRajan அட போப்பா போ. போயி விலையில்லா இலவசமா குரானா தடுப்பூசி போடுறாங்களாம். நீயும் போயி போட்டுக்கோ சில்லறை செலவு இல்லாம. சும்மா விவசாயி நிவாரணம் கொடு அது இதுன்னு கடைத்தேங்காய் உடைக்கிற வேலைய வுடு . துட்டு பிரிகிற உன் கும்பல் எப்பேர்பட்டதுன்னு ஊர் பூரா தெரிஞ்சு போச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X