தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: கெஜ்ரிவால் வேண்டுகோள்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியா முழுவதும் இன்று (ஜன.,16) கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. டில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில்
ArvindKejriwal, CovidVaccine, Rumors, DoNotBelieve, Corona, Vaccine, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், கொரோனா, தடுப்பூசி, வதந்திகள், நம்ப வேண்டாம்

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று (ஜன.,16) கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. டில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தடுப்பூசி நிர்வாகத்தைக் பார்வையிட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:


latest tamil news


உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு மருந்து குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியில் 81 தடுப்பூசி மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுடன் உரையாடினேன். அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
17-ஜன-202106:53:38 IST Report Abuse
Naagarazan Ramaswamy இதில் கூடவா சந்தேகம். கெஜ்ரிவால் சுயமாக சிந்திக்க தொடங்கிவிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள என் காங்கிகள் எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. விஞ்ஞானத்திற்கு எதிரிகள் அல்லரே ..iவாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202105:09:03 IST Report Abuse
J.V. Iyer டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் திருந்தி வருகிறார். வரவேற்கத்தக்க விஷயம். விளம்பரங்கள் வெளியிடும் சேனல்கள் காசு வசூலிக்க கூடாது. இது இலவசம். காசு வசூலித்தால் விளம்பரங்கள் வெளியிட கூடாது என்று நல்ல அறிவிப்பை செய்தார். தமிழ் நாட்டில் நடக்குமா?
Rate this:
Cancel
17-ஜன-202104:00:34 IST Report Abuse
AL.Nachi நல்லது சொன்னதுக்கு ஒரு ஓபோடு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X