பொது செய்தி

இந்தியா

நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பூசி

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021
Share
Advertisement
புதுடில்லி : நாடுமுழுவதும் 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று துவக்கிவைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கிவைத்தனர். நாடு

புதுடில்லி : நாடுமுழுவதும் 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



latest tamil news


தமிழக நிலவரம் முதல் நாளில் 2,945 பேருக்கு தடுப்பூசி! நாடு முழுக்க 1.91 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்


இது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று துவக்கிவைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்களப்பணியாளர்கள் 1,65,714 பேர் ஊசி போட்டுக்கொண்டனர். முதன் முதலாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப்பணியாளர் மணீஷ் குமார் என்பவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படவில்லை.



ஆந்திரா முதலிடம்



தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் முதலிடத்தில் அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், இரண்டாவது இடத்தில் பீகார் மாநிலத்தில் 16,401 பேருக்கும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவில் 15,727 பேருக்கும் போடப்பட்டுள்ளது.


latest tamil news




தமிழகத்தில் 2,783 பேருக்கு தடுப்பூசி




தமிழகத்திலும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். முதல்நாளான இன்று (16 ம் தேதி) மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X