பெங்களூரு :: ''தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளதையடுத்து, கொரோனாவுக்கு முடிவு ஆரம்பமாகிவிட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ராவதியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவான, விரைவு அதிரடி படைக்கான வளாகம் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டு விழா நடந்தது.அடிக்கல்லை நாட்டி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:
![]()
|
உலகில், கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி தலைமையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளதையடுத்து, கொரோனா தொற்றுக்கு முடிவு ஆரம்பமாகிவிட்டது. கொரோனா பரவத் துவங்கிய போது, அதிக மக்கள் தொகை உடைய இந்தியாவால், இதை சமாளிக்க முடியாது என, பலரும் நினைத்தனர்.
ஆனால், பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத்தால், கொரோனா தொற்றை, வல்லரசு நாடுகளை விட, இந்தியா வெற்றிகரமாக சந்தித்துள்ளது; இதற்கு, மக்கள் அளித்த ஒத்துழைப்பு தான், பெரிதும் காரணம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE