பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 16, 2021
Share
Advertisement
ஜன., 17, 2012திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயக்குடியில், 1929 ஜூலை, 5ம் தேதி பிறந்தவர், பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், இயல்பிலேயே நாதஸ்வரக் கலைஞராக உருவானார். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம், தன், 9வது வயதில் நாதஸ்வரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய், 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார்.இவரது கணவர் அ.சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்டத்தில்
  இதே நாளில் அன்று


ஜன., 17, 2012



திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயக்குடியில், 1929 ஜூலை, 5ம் தேதி பிறந்தவர், பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், இயல்பிலேயே நாதஸ்வரக் கலைஞராக உருவானார். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம், தன், 9வது வயதில் நாதஸ்வரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய், 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார்.இவரது கணவர் அ.சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்.பெண், நாதஸ்வரம் வாசிப்பதற்கு இருந்த தடையை, ஒவ்வொன்றாக உடைத்தெறிந்தார். திருச்சி வானொலியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நாதஸ்வர கலைஞராக பணிபுரிந்தார். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் என்ற பெருமை பெற்ற பொன்னுத்தாய், 'கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர்' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 2012 ஜன., 17ம் தேதி, தன், 83வது வயதில், காற்றில் கலந்தார்.நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாய் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X