உறுதிப்படுத்துகிறது!
பிரதமர் மோடி தலைமையிலான புதிய இந்தியா, பேரழிவுகளை, வாய்ப்புகளாகவும்; சவால்களை, சாதனைகளாகவும் மாற்றி வருகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இது, சுயசார்பு இந்தியா திட்டத்தை உறுதிப்படுத்துகிறது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
சஞ்சீவினி போன்றது!இது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இதுதான். கொரோனாவுக்கு எதிரான இந்த போரில், நாம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள், 'சஞ்சீவினி' போன்றவை. ஆராய்ச்சியாளர்கள் மீது, மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.
ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பா.ஜ.,
புரட்சிகரமான நடவடிக்கை!
நம் நாட்டில், கொரோனா தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது, ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. இதுவரை, கடினமாக உழைத்து, பல உயிர்களை காப்பாற்றி வந்த மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.
உத்தவ் தாக்கரே
மஹாராஷ்டிர முதல்வர், சிவசேனா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE