ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி: ஐ.நா.,பொதுச் செயலர் வலியுறுத்தல்!

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நியூயார்க் : ''தங்கள் நாட்டில் மட்டும் தடுப்பூசி வழங்கினால், கொரோனா வைரசை தடுக்க முடியாது. ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க உலக நாடுகள் உதவ வேண்டும்,'' என, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா கட்டரஸ் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, உலக நாடுகளில், கொரோனா பலி எண்ணிக்கை, 20 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2019 டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது
ஏழை நாடுகள், தடுப்பூசி,  ஐ.நா., பொதுச் செயலர்,  வலியுறுத்தல்!

நியூயார்க் : ''தங்கள் நாட்டில் மட்டும் தடுப்பூசி வழங்கினால், கொரோனா வைரசை தடுக்க முடியாது. ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க உலக நாடுகள் உதவ வேண்டும்,'' என, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா கட்டரஸ் எச்சரித்துள்ளார்.


இதற்கிடையே, உலக நாடுகளில், கொரோனா பலி எண்ணிக்கை, 20 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2019 டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாடுகளில், இந்த தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.


வறுமை


இந்நிலையில், உலகெங்கும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய கணக்கின்படி, உலகெங்கும், 9.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 20 லட்சத்து, எட்டாயிரத்து, 237 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அனடோனியா கட்டரஸ் கூறியுள்ளதாவது:கடந்தாண்டு செப்., கணக்கின்படி, கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியது.

தற்போது அந்த எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரை இழந்து, பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலர் வெறுமையை உணர்கின்றனர்.இந்த வைரசால், உலகம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த வைரஸ், 191 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகெங்கும் பலரது வாழ்க்கையை அது புரட்டிப் போட்டுள்ளது. சமூகப் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்; வருவாயை இழந்துள்ளனர்.அதேபோல், பல கோடிக்கணக்கானோர், வறுமைக்கும், பட்டினிக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் பரவல் தீவிரமாவதற்கும், அதிக பாதிப்பை ஏற்படுத்தியதற்கும் காரணம், உலக அளவிலான ஒரு கூட்டு முயற்சி இல்லாததே.உயிரிழந்த, 20 லட்சம் பேரை நினைவில் வைத்து, இனியாவது உலக நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும். தற்போது கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

தடுப்பூசி வெறுமை தற்போது ஏற்பட்டுள்ளது.அறிவியல் வென்றுள்ளது; ஆனால், ஒற்றுமை தோல்வி அடைந்துள்ளது. பல நாடுகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன. தங்களுக்கான தேவையைவிட அதிக அளவில், தடுப்பூசிகளை கொள்முதல் செய்கின்றன.தங்களுடைய மக்களை காக்க வேண்டியது, அரசின் கடமை. அதே நேரத்தில், ஒரு நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதால், பெரிய அளவில், இந்த வைரசை தடுக்க முடியாது.
உறுதிசுயபாதுகாப்பு என்பது சுய தோல்வியாகவே அமைந்துவிடும். மற்ற நாடுகள் பாதிக்கப்பட்டால், அது நம்மையும் பாதிக்க வைக்கும் என்பதை உணர வேண்டும்.தற்போது, பணம், அதிகாரம் உள்ள நாடுகளுக்கு, இந்தத் தடுப்பூசி கிடைத்துள்ளது. அதே நேரத்தில், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதுடன், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை, பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

'கோவாக்ஸ்' என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். அதன் மூலம், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை, உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே, வைரஸ் பாதிப்பை தடுக்க முடியும். மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், போலீஸ் உட்பட முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க வேண்டும். அவர்களை பாதுகாத்தாலே, மக்களை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.தடுப்பூசி குறித்து மக்களுக்கு நம்பிக்கைஊட்டும் வகையில், வரும் வாரத்தில், கட்டரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள உள்ளதாக, அவரது செய்தித் தொடர்பாளர், ஸ்டெபானேடுஜாரிக் தெரிவித்துஉள்ளார்.2.11 லட்சம் பேருக்கு சிகிச்சைமத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பு கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.03 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் முடிவில், 15 ஆயிரத்து, 158 பேரிடம், பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஐந்து லட்சத்து, 42 ஆயிரத்து, 841 ஆக அதிகரித்து உள்ளது.இவர்களில், 2.11 லட்சம் பேர் மட்டுமே, தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 2 சதவீதம். வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 715 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 96.56 சதவீதமாக உள்ளது.கொரோனா பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 45 பேர், கேரளாவில், 23; மேற்கு வங்கத்தில், 16 பேர் உட்பட, 175 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களுடன், கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து, 93 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.44 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,யூ.எஸ்.ஏ
17-ஜன-202108:40:41 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) UN and WHO will only fund and recomm Chinese vaccine. Don't believe them..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஜன-202107:41:01 IST Report Abuse
blocked user சென்னை போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள ஊர்களில் கூட இன்னும் முகக்கவசம் அணியாமல் பலர் தெனாவெட்டில் திரிகிறார்கள் என்பது ஆபத்தான விஷயம்..
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
17-ஜன-202103:53:58 IST Report Abuse
கும்புடுறேன் சாமி இந்தியால தடுப்பூசி இருந்தும் ஒருத்தர் குழந்தை மாதிரி தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறார் ஆனா சில நாடுகள்ல தடுப்பூசி கிடைக்காம ஏங்குறாங்க ,
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜன-202109:29:29 IST Report Abuse
கொக்கி குமாரு தமிழ்நாட்டில் திருட்டு திமுக மூலம் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க கும்புடாத சாமீ தினமும் எதை எதையோ உளறிகிட்டு இருக்கு....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
17-ஜன-202110:52:44 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"ஒருத்தர் குழந்தை மாதிரி தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறார்" நீ ஏன் அவருக்கு போடவேண்டும் என்று துடிக்கிறாய் ?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
17-ஜன-202110:55:04 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க உலக நாடுகள் உதவ வேண்டும்,'' என, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா கட்டரஸ் எச்சரித்துள்ளார்." சீனாவின் தடுப்பூசியால் எழுபதுக்கும் மேற்பட்ட பக்க விளைவுகள் என்று செய்தி வந்தது அதே சமயம் (பக்க விளைவுகளற்ற) அவசர தடுப்பூசியால் இந்தியாவுக்கு பேர் கிடைத்துள்ளது அதனால் ஏற்பட்ட பொறாமையில் இவன் பேசுகிறான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X