கடந்த டிசம்பர் மாதம் துவங்கி சீனாவின் பல பகுதிகளில் கொரனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. பெய்ஜிங், சிச்சுவான், லியோனி, ஹிபே, ஹாய்லாங்ஜங்க் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததற்கு வெளிநாட்டு பயணிகள் குளிர்ப்படுத்தப்பட்ட பதப்படுத்திய உணவுகளை தங்கள் நாட்டுக்குள் எடுத்து வந்ததுதான் காரணம் என்று தெரிவித்துள்ளது. அமைச்சர் மா சாங்வே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு சுகாதார துறை இணைய தளத்திலும் அவரது கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து வைரஸ் எவ்வாறு உலகுக்குப் பரவியது என்று ஆராய உலக சுகாதார அமைப்பு தற்போது சீனா வந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இந்த அமைப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் தற்போது 14 நாட்கள் கட்டாய ஊரடங்கில் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த 14 நாட்கள் முடிவதற்குள் சீனா பல வதந்திகளை கிளப்ப முயல்கிறது.
வூஹான் நகரிலிருந்து வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்கிற ரீதியில் இவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை திசை திருப்ப வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மூலமாகவே வைரஸ் பரவியதாக சீன அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இவ்வாறு சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

குளிர்ப் படுத்தப்பட்ட உணவு வகைகள் மூலம் வைரஸ் பரவுவது அரிது என்று முன்னதாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருந்த போதிலும் சீனா தொடர்ந்து அவற்றின் மூலமாகவே தங்கள் நாட்டில் கொரோனா பரவுகிறது என்று கூறி வருகிறது. முன்னதாக ஐஸ்கிரீம் தொழிற்சாலையிலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE