அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு உரிமை: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (14+ 12)
Share
Advertisement
மதுரை : 'தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் பெற்றுத் தந்தது அ.தி.மு.க., அரசு தான்' என மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தனர்.முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது அ.தி.மு.க., அரசு தான் துாணாக
ஜல்லிக்கட்டு உரிமை, முதல்வர் பழனிசாமி, பெருமிதம்

மதுரை : 'தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் பெற்றுத் தந்தது அ.தி.மு.க., அரசு தான்' என மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தனர்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது அ.தி.மு.க., அரசு தான் துாணாக நின்று மீண்டும் சிறப்போடு நடக்க ஏற்பாடு செய்தது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைவராலும் 'ஜல்லிக்கட்டு நாயகன்' என அன்போடு அழைக்கப்படுகிறார். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடக்கும் இம்மண் அனைவராலும் பாராட்டப்படும் மண். சீறும் காளைகளை இளைஞர்கள் அடக்கும் இந்த ஜல்லிக்கட்டு திருவிழா உலகப் புகழ் பெற்றது. நமது கலாசாரம், பண்பாட்டை காக்கும் ஜல்லிக்கட்டை அ.தி.மு.க., அரசு தான் நிலைநிறுத்தியது. வீரமிக்க காளைகளை வளர்க்கும் விவசாய மக்கள், களமாடும் வீரர்களுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 'வீரம் செறிந்த நம் மண்ணின் விளையாட்டு ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை ஆண்டுதோறும் அரசின் சார்பாக நடத்தி வருகிறோம். தடை வந்தபோது அ.தி.மு.க., அரசால் மீண்டும் உரிமை நிலைநாட்டப்பட்டது. இதை உலகம் உள்ளவரை வரலாறு கூறும்,' என்றார்.


நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும்


சிறந்த காளை உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், 'வணிக ரீதியான விமானங்களை ஓட்டும் படிப்பை முடித்தேன். தற்போது விவசாயம் செய்கிறேன். மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு காளை வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது 8 காளைகள் வளர்க்கிறேன். முதல் முறையாக 2019 அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியில் நான் களமிறக்கிய காளை 3வது பரிசு பெற்றது. இம்முறை கருடன் என்ற காளை களம் இறங்கி முதல் பரிசை வென்றுள்ளது. பரிசை எதிர்பார்த்து மாடுகளை வளர்க்கவில்லை. நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக ஏற்று பராமரிக்கிறேன்' என்றார்.


அரசு வேலையில் முன்னுரிமைசிறந்த மாடுபிடி வீரராக தேர்வான கண்ணன் கூறுகையில், 'அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு களத்தில் மாடுகளை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனது வெற்றிக்கு நண்பர் ராமர் பெரிதும் உதவினார். உயிரை பணயம் வைத்து விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க அரசு முன்வர வேண்டும்' என்றார்.


முதல்வர் முன் அமைச்சர் காளை


ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்த முதல்வரும், துணை முதல்வரும் சிறிது நேரம் மேடையில் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தனர். அப்போது இவர்களுடன் மேடையில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை 'கொம்பன்' களம் இறங்கியது. 2020ல் நின்று விளையாடிய இக்காளை காளையர்களை துவம்சம் செய்தது. இதனால் இம்முறை கொம்பனை அடக்க வீரர்கள் தயக்கம் காட்டினர். வாடி வாசலை விட்டு வெளியே வந்த கொம்பன் களத்தில் ஒரு சுற்று சுற்றி வீரர்களிடம் அகப்படாமல் தப்பியது. இதே போல ராஜசேகர், கார்த்திகேயன், இலங்கை அமைச்சர் தொண்டைமான், திருச்சி திருநங்கை விஜி, மதுரை ஐராவதநல்லுார் மாணவி யோகேஸ்வரி ஆகியோரின் காளைகளும் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு களத்தை அலங்கரித்தன. இவற்றுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு


ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் கேலரிக்கான டோக்கன் வழங்கும் பொறுப்பை ஆர்.டி.ஓ., முருகானந்தம் ஏற்றிருந்தார். போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரியில் இருந்ததாக ஆர்.டி.ஓ., முருகானந்தம், கலால் துறை உதவி கமிஷனர் சங்கரநாராயணன் ஆகியோரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் வலுக்கட்டாயமாக அதிகாரிகளை வெளியேற்றினர். பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சுகுமாறனையும் கேலரியில் அமர போலீஸார் அனுமதிக்கவில்லை. ஜல்லிக்கட்டு பாஸ் இல்லையென கூறி சில தாசில்தார்களை அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்கள் திரும்பி சென்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கினர். போலீஸ் நடவடிக்கையால் வருவாய்த்துறையினர் அதிருப்தி அடைந்தனர்.


மீனாட்சி கோயிலில் முதல்வர்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை முதல்வர் பழனிசாமி தரிசனம் செய்தார். அவரை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை வரவேற்றனர். பின்னர் மதியம் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். கொரோனா தடுப்பூசி என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்பதால், அதனை துவக்கிய பின்பு அரசியல் தொடர்பான விஷயங்கள் குறித்து முதல்வர் பேசுவதை தவிர்த்தார்.


ஜல்லிக்கட்டு பரிசுகள் -தங்கர்பச்சான் யோசனை


ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கார் பரிசளிப்பதை விட உழவுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம்' என நடிகரும் இயக்குனருமான தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக முதல்வர் ஒரு காரும் துணை முதல்வர் ஒரு காரும் பரிசாக தருவதாக செய்தி அறிந்தேன்.
இந்த காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத்தொழில் தொடர்பான கருவிகள் மாடுகள் நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தி தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr என்கிற பெயரில் உள்ள கேடி Suriya - கூவம் காவா ஓரம் ,எத்தியோப்பியா
17-ஜன-202120:00:38 IST Report Abuse
Dr என்கிற பெயரில் உள்ள கேடி  Suriya எம் ஜி ஆர் முதல்வர், பிறகு வி.என்.ஜானகி முதல்வர் அதன் பிறகு ஜெயலலிதா முதல்வர் இவர்களெல்லாம் வாரிசு இல்லையா, பழனிசாமி??
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜன-202111:49:51 IST Report Abuse
vbs manian நிஜமாவே பெருமிதமா.. ஆண்டு தோறும் ஐம்பது அறுபது பேர் தீவிர விபத்து. ஐந்தாறு பேர் உயிரிழப்பு. இதில் சிலர் குடும்பத்தை காப்பாற்றுபவர்கள். இந்த சோகம் துயரம் யாருக்கும் கண்ணில் படவில்லையா.
Rate this:
Cancel
17-ஜன-202111:28:31 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே... மாடுகளுக்கு பச்சைக் கொடி காட்டுனா ரைட் நு தெரியுமா? பதில் ரெண்டு புல்லுக் கட்டுகளைக் காட்டியிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X