தமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் துவங்குகிறார் ராகுல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் துவங்குகிறார் ராகுல்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (23)
Share
கோவை: தமிழகத்தில், தேர்தல் பிரசாரத்தை, கோவையில் துவங்கும் ராகுல், வரும், 23ம் தேதி வர உள்ளார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். காங்., முன்னாள் தலைவர் ராகுலை, தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய காங்., திட்டமிட்டுள்ளது. அவர் கொங்கு மண்டலத்தில், மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்., மாநில தலைவர் அழகிரி
rahul, election, campaign, kovai, starts, ராகுல், தேர்தல் பிரசாரம், கோவை, ராகுல்

கோவை: தமிழகத்தில், தேர்தல் பிரசாரத்தை, கோவையில் துவங்கும் ராகுல், வரும், 23ம் தேதி வர உள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். காங்., முன்னாள் தலைவர் ராகுலை, தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய காங்., திட்டமிட்டுள்ளது. அவர் கொங்கு மண்டலத்தில், மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்., மாநில தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதற்காக வரும், 23ம் தேதி காலை டில்லியில் இருந்து ராகுல் கோவை வருகிறார்.


latest tamil news


கோவை விமான நிலையத்தில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க, காங்., கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, 'சிட்ரா' சந்திப்பில், அவர் பொதுமக்கள் இடையே பேச உள்ளார். தொடர்ந்து, கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களை சந்திக்கிறார். தொடர்ந்து, திருப்பூர் செல்லும் ராகுல், அங்கு தொழில் துறையினர் உட்பட பலரையும் சந்திக்கிறார். 24ம் தேதி காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X