இந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லக்னோ: “இந்திய - சீன எல்லைப் பகுதியில், நம் ராணுவ வீரர்களின் செயல்திறன், நாட்டு மக்களை தலை நிமிர வைத்துள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறினார்.லடாக்கில் அமைந்துள்ள, இந்திய - சீன எல்லைப் பகுதியில், இருதரப்பு வீரர்களும் குவிக்கப்பட்டிருப்பதால், பல மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து, இருதரப்பு ராணுவ
இந்திய வீரர்கள் செயல்திறன்   அமைச்சர் ராஜ்நாத் பாராட்டு


லக்னோ: “இந்திய - சீன எல்லைப் பகுதியில், நம் ராணுவ வீரர்களின் செயல்திறன், நாட்டு மக்களை தலை நிமிர வைத்துள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறினார்.லடாக்கில் அமைந்துள்ள, இந்திய - சீன எல்லைப் பகுதியில், இருதரப்பு வீரர்களும் குவிக்கப்பட்டிருப்பதால், பல மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே, பேச்சு நடந்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில், உறுதியான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.


பதிலடி



இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:எங்களுக்கு போர் நடக்கவேண்டாம். அனைவரின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். எனினும், ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் பெருமையை சீர்குலைக்க யாரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு, எங்கள் வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.


மன வலிமை



latest tamil news



அப்போது அவர் பேசியதாவது:இந்திய - சீன எல்லைப் பகுதியில், நம் ராணுவ வீரர்களின் கவர்ந்திழுக்கும் செயல்திறன், நாட்டின் மன வலிமையை அதிகரித்துள்ளது. மேலும், நாட்டு மக்களை தலை நிமிர வைத்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராணுவ தலைமை தளபதி நரவானே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நேபாள அமைச்சருடன் சந்திப்பு



இந்தியாவுக்கு, அரசுமுறைப் பயணமாக வந்துள்ள, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப்குமார் கியாவாலி, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து, ராஜ்நாத் சிங், 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளதாவது:நேபாள வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு, நல்ல முறையில் அமைந்தது. இந்தியா - நேபாள உறவு, இருதரப்பு அரசுகளோடு மட்டும் முடிந்துவிடாது; இருநாட்டு மக்களாலும், அந்த உறவு மேம்படுகிறது.
இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
17-ஜன-202109:20:49 IST Report Abuse
Madhusoodhana Ramachandran நேபாளம் சீன விடம் சோரம் போய் விட கூடாது. சீன நாட்டு தலைமை ஒரு நய வஞ்சக செய் நன்றி மறந்த உலகின் மோசமான நம்பிக்கை துரோகி. ஆனால் நேபாளம் ஒரு இந்து நாடாக இருந்தவரைக்கும் இந்தியாவுடன் நல்ல நட்பு பேணி வந்தது. வஞ்சக சீன தலைமை அஙகு சப்தகிமில்லமல் ஊடுருவி பணம் கொடுத்து கம்யூனிஸ்துகளாக மாற்றி நேப்பாள அரசரரின் அரசை கவிழ்த்து சாதி செய்து தற்போது அவர்கள் நாட்டையும் ஆட்டை போட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாவம் பக்கத்துக்கு நாடான இப்போது அது நினைத்த பழைய இந்தியா அரசு அல்ல. அதனால் நேபாளத்தை இப்போ கப்லிகாரம் சேய்ததை போல் செய்யமுடியவில்லை. உதவிக்கு இந்தியா தயாராக உள்ளது.இதை நேபாளம் உணரவேண்டும். காசுக்காக நாட்டை காட்டி கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
17-ஜன-202107:58:15 IST Report Abuse
Ellamman அர்னாப் கோஸ்வாமிக்கு தகவல் சொல்லிவிடீர்களா ஜி?? அவருக்கு தானே முதலில் கூறவேண்டும்?? அப்போ தானே அவர் டிவியில் நல்ல கூவி பீ ஜெ பீ க்கு புகழ் சேர்க்கமுடியும்??
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜன-202112:36:10 IST Report Abuse
கொக்கி குமாரு தமிழக டிவி சேனல்கள் அனைத்தும் திருட்டு திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்குதாமே, அதை பற்றி தங்கள் கருத்து என்ன?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X