பொது செய்தி

தமிழ்நாடு

தனிமனிதனால் 40 காடுகள்

Added : ஜன 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புவி வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளை நம் தலைமுறையிலேயே அனுபவித்து செல்லும் நிலைக்கு வேகமாக உலகம் இயங்கி வருகிறது. இந்நிலையை மாற்றி அழிந்து வரும் வனக்காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.கே.நாயர். கேரள மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்து குஜராத்தில் வசித்து வரும் இவர் ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 40 காடுகளை
 தனிமனிதனால்  40 காடுகள்

புவி வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளை நம் தலைமுறையிலேயே அனுபவித்து செல்லும் நிலைக்கு வேகமாக உலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையை மாற்றி அழிந்து வரும் வனக்காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.கே.நாயர்.

கேரள மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்து குஜராத்தில் வசித்து வரும் இவர் ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 40 காடுகளை உருவாக்கியதோடு 2025க்குள் 10 கோடி மரங்கள் எனும் இலக்கை நோக்கி பயணிக்கிறார். இவரது செயல்பாடுகளால் குளோரி ஆப் இந்தியா, வசுந்தரா உள்ளிட்ட விருதுகள் தேடி வந்துள்ளது.

சாதாரண தொழிலாளியாக இருந்து தொழிலதிபராக உயர்ந்த இவர் சமூக பணிகளில் தன் பங்களிப்பின் போது காடுகளின் காதலனாக மாறி உள்ளார். இவரது மரங்களின் மீதான காதல் ஆறு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. குஜராத் மாநிலத்தில் சாலை திட்டத்தின் போது நுாற்றுக்கு மேற்பட்ட பெரிய மரங்களை வெட்டிய போது சிறிய பறவைகளுடன் பறவைக் கூடுகள் தரையில் விழுந்தது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு ஏதாவது மாற்றுத்தீர்வு செய்ய வேண்டுமென முடிவெடுத்த போது தான் சிறிய இடங்களில் அடர் வனங்களை உருவாக்கும் முறைகளை கேள்விப்பட்டு நிபுணர் குழுக்களை தொடர்பு கொண்டுள்ளார். ஆர்வலர்கள் சிலரோடு சேர்ந்து சிறு இடத்தில் 1500 மரங்களை நட்டார். இதை முன்னுதாரணமாக கொண்டு மகாராஷ்டிரா உம்பர்கானில் ஒரு ஏக்கரில் ரசாயன குப்பை கிடங்கை சிறிய காடாக மாற்றினர்.

2016ல் 38 வகையான 32 ஆயிரம் மரங்களை நட்டார். அவை தற்போது காடுகளாக மாறி பறவைகளுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமாக மாறின. இந்த காடுகள் யார் தயவும் இன்றி சொந்தமாக வளர்வதை கண்டறிந்தவுடன் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பு வந்தது. சத்தீஸ்கரில் குறுகிய இடங்களில் ஒரு லட்சம் மரங்கள் கொண்ட அடர் காடுகள் பல உருவாக்கப்பட்டன.

கோல்கட்டா துர்க்காபூரில் இவர் தலைமையிலான குழு ஒரு காட்டை ஏற்படுத்தியது. தற்போது வரை 7 மாநிலங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மரங்களுடன் அடர் வனம் உருவாகியதன் பயனாக அவைகள் ஆக்சிஜன் பாக்டரிகளாக மாறி வருகிறது.

ஆர்.கே. நாயர் கூறியதாவது: மியாவாகி டெக்னிக், வழக்கமான தோட்ட நுட்பங்களுடன் ஒப்பிடும்போது 30 மடங்கு அதிக மரங்கள் நடப்படுகின்றன. வெவ்வேறு மர இனங்களாக ஒரே பகுதியில் உருவாகின்றன. வழக்கமான காடுகளுடன் ஒப்பிடும்போது இவை 30 மடங்குக்கும் மேற்பட்ட கார்பன்-டை -ஆக்சைடை உறிஞ்சி விடுகிறது.

நகர்பகுதிகளின் கிடைக்கும் சிறிய இடங்களிலும் இவற்றை ஏற்படுத்துவதால் இயற்கை குளிர்விப்பானாக மாற்றி விடும். 'என்விரோ கிரியேட்டர்ஸ்' அறக்கட்டளை சார்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆன் லைன் பயிற்சி வழங்குகிறோம். இந்த உலகத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இடமாக மாற்ற முயற்சிப்பதே எங்களது நோக்கம், என்றார்.இவரை பாராட்ட rkn1671@yahoo.co.in

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
18-ஜன-202113:45:15 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ ஐயா தமிழ் நாட்டு பக்கம் வந்துறாதீங்க, இங்க சமூக ஆர்வலர் இயற்கை நல காப்பாளர் என்ற பெயர்களில் உலவுபவர்கள் பெரும்பாலும் மரம் வெட்டுபவர்களைத் தேடிப்போய் மிரட்டி லட்சங்களில் செக் வாங்குபவர்கள் மட்டுமே, உங்க உயிருக்கு உத்திரவாதம் இருக்காது, நீங்க வாக்கிங் கூட போக முடியாது,
Rate this:
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
17-ஜன-202112:51:16 IST Report Abuse
seenivasan இயற்கையை சுய நலத்திற்காக அழிக்கும் மானிடர்கள் மத்தியில், இவர் ஒரு புனிதர். வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X