பொது செய்தி

தமிழ்நாடு

சங்க நாணயங்களை சேகரிக்கும் எம்.எல்.ஏ.,

Added : ஜன 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரசியல்பணி போக மீதம் கிடைக்கிற நேரத்தைசங்க நாணயங்கள் சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்ச்சி செய்வதிலும் பயன்படுத்துகிறார்.இவரிடம் சங்க கால பாண்டிய மன்னன் பெருவழுதி, சேர, சோழ, பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், விஜய நகர பேரரசு, டெல்லி சுல்தான்கள், நாயக்கர்கள், மவுரிய பேரரசு, குப்தர்கள் என அக்காலத்தில் அரசர்களின் காசுகளை தேடி பிடித்து சேர்த்து வைத்துள்ளார். தங்கம், வெள்ளி,
 சங்க நாணயங்களை  சேகரிக்கும் எம்.எல்.ஏ.,

அரசியல்பணி போக மீதம் கிடைக்கிற நேரத்தைசங்க நாணயங்கள் சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்ச்சி செய்வதிலும் பயன்படுத்துகிறார்.

இவரிடம் சங்க கால பாண்டிய மன்னன் பெருவழுதி, சேர, சோழ, பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், விஜய நகர பேரரசு, டெல்லி சுல்தான்கள், நாயக்கர்கள், மவுரிய பேரரசு, குப்தர்கள் என அக்காலத்தில் அரசர்களின் காசுகளை தேடி பிடித்து சேர்த்து வைத்துள்ளார். தங்கம், வெள்ளி, ஈயம், பித்தளை, செப்பு, கருப்பு உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்ட அரியவகை காசுகள் இவரிடத்தில் உள்ளது.

இதோடு தமிழ் பிராமி எழுத்துக்களை படிக்கவும் கற்றுள்ளார்.தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., மனம் திறந்தபோது...என் கல்லுாரி காலத்தில் 1983ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு பெரியவர் சங்க கால காசுக்களை விற்று கொண்டிருந்தார்.

என்னிடத்தில் ராஜராஜ சோழன் காலத்து காசு என்று சொல்லி கொடுத்தார். அதை நான் பணம் கொடுத்து வாங்கினேன். அதிலிருந்து நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சங்க நாணயங்ளை தேடி செல்வேன்.

கரூர் அமராவதி, கும்பகோணம் ஆற்றுபகுதியில் இதுபோன்ற சங்க நாணயங்கள் கிடைக்கும். ஆற்றில் அடித்து வரப்பட்டு மண்ணை அரித்து எடுக்கும் போது நாணயங்கள் தட்டுப்படும். என்னிடத்தில் மாறவர்ம சுந்தரபாண்டியன், உய்ய கொண்டான், ராஜராஜன் காலத்து நாணயங்களை வைத்துள்ளேன். இவற்றை பராமரிப்பது சிரமம். இவற்றை வரிசையாக சேர்த்து வைப்பது, யார் வெளியிட்டது போன்ற குறிப்புகள் அவசியம்.

காசுகள் சதுரம், வட்டம் வடிவங்களில் இருக்கும். நான் ஓரளவு கிரந்தம், தமிழி, தேவநாகரி எழுத்துகளை வாசிக்க கற்றதால் எக்கால வகை நாணயங்கள் என கண்டு பிடிப்பேன்.நாணயம் சேகரிக்கப்பதில் ஆர்வம் ஏற்பட்ட உடன் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து நாணயங்கள் பற்றி கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டேன்.

அவர் நாணயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். அவரது ஊக்கத்தினால் தொடர்ந்து சங்க நாணயங்கள் சேகரித்து வருகிறேன் என்றார்.'தங்க நாணயங்கள்' சேகரிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் சங்க நாணயங்களை சேகரிக்கும் தங்கம் தென்னரசை வாழ்த்துவோம்.இவரை பாராட்ட 97891 18449.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202111:21:17 IST Report Abuse
oce இவர் திமுக காரர்.இவர் சேர்த்து வைத்துள்ள சங்க கால நாணயங்களை அண்ணா அறிவாலயத்தில் காட்சி பொருளாக வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X