அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை!

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., குறித்து மிக தரக்குறைவாக விமர்சித்துள்ளார், கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி.இதனால் பெண்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., குறித்து மிக தரக்குறைவாக விமர்சித்துள்ளார், கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி.



latest tamil news


இதனால் பெண்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார், உதயநிதி. இவரைக் குற்றம் சொல்லி, பிரயோஜனம் இல்லை; அவரின் பரம்பரை அப்படி! இவரது தாத்தா கருணாநிதி, எப்படிப்பட்ட பண்பாளர் என்பது உலகத்திற்கே தெரியும். எம்.எல்.ஏ., அனந்தநாயகி, 'திராவிட நாடு எங்கிருக்கிறது?' என, சட்டசபையில் கேள்வி எழுப்பியதற்கு, கருணாநிதி, 'பாவாடையைத் திறந்து பார்த்தால், அங்கே பளிச் சென்று தெரியும்' என, அநாகரிகத்தின் உச்சமாக கூறினார்.மதுரையில், முன்னாள் பிரதமர் இந்திரா, தி.மு.க., ரவுடிகளால் கடுமையாக தாக்கப்பட்டு, நெற்றியில் ரத்தம் சிந்தினார்.

இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, காது கூசும் அளவிற்கு பதில் சொன்னார், கருணாநிதி. சட்டசபையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.,வினரால் துகில் உரியப்பட்டபோது, அதை பெரிதும் ரசித்தவர், கருணாநிதி.இப்படியாக கருணாநிதி, பெண்களை எப்படி மதித்தார் என்பதை சொல்லிக் கொண்டே போகலாம்.தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரையும், நடிகை பானுமதியை, 'படிதாண்டா பத்தினி அல்ல' என, சட்டசபையில் கேவலமாக பேசியதை, நாம் நன்கு அறிவோம்கிராம சபைக் கூட்டத்தில், கேள்வி கேட்ட ஒரு பெண்ணைப் பார்த்து, 'நீ, அமைச்சர் வேலுமணியின் கையாள் என்பது, எனக்கு தெரியும்' என மிரட்டிய ஸ்டாலின், தி.மு.க.,வினர், அந்த பெண்ணை தாக்கவும் வழிவகை செய்தார்.


latest tamil news


இப்படியாக, தி.மு.க., மற்றும் கருணாநிதியின் வழி வந்தோர், பெண்களைத் தரக் குறைவாக பேசுவதில், பலே கில்லாடி என்பது, ஊரறிந்த உண்மை.இதை அப்போதே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோகரன், 'கருவின் குற்றம்' என, தெளிவாகக் கூறி விட்டார். இவ்வளவு கேவலமாக பேசும், தி.மு.க.,விற்கு, தக்க பாடம் கற்பிக்க வேண்டியது, பெண்களின் தார்மீகக் கடமை.


Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
18-ஜன-202102:24:17 IST Report Abuse
ANTONYRAJ விடியலைநோக்கி உனக்கெல்லாம் எப்பவுமே விடியாது. உனக்கு என்ன பிரச்சனை. நீ முதலில் உன் சொந்த பெயரில் கருத்து போடு.பிரேசில்ல இருந்து கருத்து போட வந்துட்ட?
Rate this:
Cancel
Manikandan S - Thondi,இந்தியா
17-ஜன-202120:37:17 IST Report Abuse
Manikandan S தற்காலத்திய "குற்றப் பரம்பரை"
Rate this:
Cancel
Dr என்கிற பெயரில் உள்ள கேடி Suriya - கூவம் காவா ஓரம் ,எத்தியோப்பியா
17-ஜன-202120:20:49 IST Report Abuse
Dr என்கிற பெயரில் உள்ள கேடி  Suriya வெட்கமே இல்லாமல் ஒரு பெண் என்று கூட எண்ணாமல் சசிகலாவை சாக்கடை தண்ணீர் என்று சொன்னான் ஒருத்தன் அவனை கேட்க துப்பற்றவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X