பொது செய்தி

இந்தியா

'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: மத்திய அரசு தீவிரம்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
. புதுடில்லி: மின்னணு தொழில்நுட்பத்தில், திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு, சுய கட்டுப்பாடு ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த,'நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம்' போன்ற நிறுவனங்கள், இணைய வசதி மூலம், திரைப்படம், 'டிவி' தொடர்கள், நாடகங்கள்

. புதுடில்லி: மின்னணு தொழில்நுட்பத்தில், திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு, சுய கட்டுப்பாடு ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



latest tamil news


அமெரிக்காவைச் சேர்ந்த,'நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம்' போன்ற நிறுவனங்கள், இணைய வசதி மூலம், திரைப்படம், 'டிவி' தொடர்கள், நாடகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அவற்றை கட்டணம் செலுத்தி ஏராளமானோர் பார்க்கின்றனர்.

இந்நிறுவனங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றில், ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக, மத்திய அரசிடம் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. எனவே, இது போன்ற மின்னணு தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும், நிறுவனங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான வலைதள செய்தி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம், விதிமுறைகளை உருவாக்கி வருகிறது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:திரைப்படங்களை தணிக்கை செய்ய, மத்திய திரைப்பட தணிக்கை குழு உள்ளது. அதுபோல, பத்திரிகை செய்திகளை கண்காணிக்க, இந்திய பத்திரிகை கவுன்சில் உள்ளது. வசதியில்லைகேபிள் டிவி ஒருங்கிணைப்பு சட்டத்தின் கீழ்,'டிவி சேனல்'கள் வருகின்றன.


latest tamil news


ஆனால், 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு தொழில்நுட்பத்தில், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களின் ஒளிபரப்பையும், வலைதள செய்தி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த, எந்தவொரு சட்டமும் இல்லை. மேலும், அந்த தளங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து புகார் தெரிவிக்கவும், ரசிகர்களுக்கு வசதியில்லை. எனவே, இத்துறை, சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான சட்ட விதிமுறைகளை உருவாக்கும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202112:01:03 IST Report Abuse
Ganesan Madurai இது தேவையில்லை. சிறுபிள்ளைத்தனமான முடிவு. காசு கொடுத்து பார்க்க யாரையும் இந்த கம்பெனிகள் கட்டுப்படுத்த வில்லை. வேண்டாமென கருதினால் அந்தசேவையை பயன்படுத்த வேண்டாமே. மொதல்ல மக்கள் வரிப்பணத்தில் இலவசமாக கிடைக்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தும் வேலையை பார்க்கட்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜன-202111:41:53 IST Report Abuse
vbs manian நிஜம். நெட்டபிலிக்ஸ் ஹாட் ஸ்டார் பிற மொழி படங்களை குடும்பத்தோடு ஏன் தனியே கூட பார்க்க முடியாது.
Rate this:
Cancel
17-ஜன-202108:09:13 IST Report Abuse
ஆப்பு டீ.வி ல வர்ர நிகழ்ச்சிகளைப் பத்தி குறை சொன்னா உடனே சரி செஞ்சுடறாங்களா? விளம்பரம் வரும்போது வால்யூம் காதைப் பொளக்குது. அது சன் டீ.விலேருந்து சங்கரா டீ.வி வரைக்கும் நடக்குது. கேள்வி கேப்பார் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X