பொது செய்தி

இந்தியா

பணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ஒத்திவைப்பு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், பலர், மாற்று சமூக வலைதளங்களுக்கு மாறி வருவதால், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பான தன் புதிய கொள்கையை, மே, 15 வரை ஒத்தி வைத்துள்ளது.அமெரிக்கவைச் சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதுடில்லி: இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், பலர், மாற்று சமூக வலைதளங்களுக்கு மாறி வருவதால், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பான தன் புதிய கொள்கையை, மே, 15 வரை ஒத்தி வைத்துள்ளது.



latest tamil news


அமெரிக்கவைச் சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும், 40 கோடி பேர், இதைப் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக, புதிய கொள்கையை, வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது.பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.


பேஸ்புக் வலைதளத்தின் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப்பை இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் . புதிய பிரைவசி அப்டேட் செய்வதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது . பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என அறிவித்தது நிறுவனம். இதனால் பலர் சிக்னல் மற்றும் மாற்று ஆப்கள் பயன்படுத்த துவங்கினர் . பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் புதிய அப்டேட் அமல்படுத்துவது, மே 15 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

latest tamil news



இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாற்று சமூக வலை தளங்களுக்கு, பலர் மாறி வருகின்றனர்.இதையடுத்து, 'புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே, 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ள சந்தேகங்கள், தவறான புரிதலுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படும்' என, வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202107:17:26 IST Report Abuse
தமிழ் எனக்கும் இன்றுகாலை வாட்ஸாப்ப் இந்த செய்தியை அனுப்பியுள்ளது.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
17-ஜன-202106:16:53 IST Report Abuse
NicoleThomson தமிழக எதிர்க்கட்சி தலைவர் போல நடந்து கொள்கிறதே இந்த வாட்சாப்
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
17-ஜன-202104:22:44 IST Report Abuse
கதிரழகன், SSLC என்ன காலம்டா இது நீ செய்யுற பாவமும் அநியாயமும் சாமிக்கு தெரியாத போயிடுமா? அத பத்தி கவலை படாம வாட்சாப்ப்புக்கு தெரிஞ்சுடுமே ன்னு கவலை படுறீய உருப்பட மாட்டீக.
Rate this:
sivan - seyyur,இந்தியா
17-ஜன-202106:59:05 IST Report Abuse
sivan செய்த பாவமும் அநியாயமும் சாமிக்கு தெரிந்தால்தான் சாகும்வரை கட்டுமரத்தை பதவிக்கு வராமல் ஒதுக்கியே வைத்து இருந்தார். செய்த பாவமும் அநியாயமும் தெரிந்தால்தான் ஆலமரம் போல இருந்த காங்கிரசை பல்லை பிடுங்கி அதன் தலைவர்களை ஜோக்கர்ஸ் ரேஞ்சுக்கு வைத்துள்ளார் சாமி சிங்கப்பூரில் இருக்கும் சிவகங்கை காரர் .... கொட்டாம்பட்டியில் இருந்தால் கூட பெருமைதான் என்று சொல்லும் அளவுக்கு இந்தியனின் வாழ்க்கைத்தரமுயர்ந்து கொண்டு வருகிறது. அரசு கோட்னு வரும் ஸ்டார்ட்டப் திட்டங்களால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகிறார்கள். WhatsApp -க்காரனுக்கும் Facebook - காரனுக்கும் கொடிபிடிப்பதை விட்டு விட்டு ... நல்ல அரசாங்கம் கொண்டு வரும் நல திட்டங்களை பயன்படுத்தி முன்னேற பாருங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X