புதுடில்லி: 'கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளை பாராட்டி, ஒரு வார்த்தை கூட, ராகுல் தெரிவிக்காதது ஏன்' என, பா.ஜ., கேள்வி எழுப்பிஉள்ளது.

நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி போடும் பணி, நேற்று துவங்கியது. இது குறித்து, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் அமித் மாளவியா, 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:அரசு அனுமதிஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கொரோனா தடுப்பூசி மருந்துகளை, மக்களுக்கு இலவசமாக செலுத்தும் பணி துவங்கிஉள்ளது. இது குறித்து, காங்கிரசைச் சேர்ந்த ராகுல், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்த பின்பே, அவற்றுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தகைய தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை பாராட்டி, ஒரு வார்த்தை கூட, ராகுல் பேசவில்லை.ஏற்கனவே அவர், மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்தவர் தான். அதை, தற்போது மக்களின் பார்வைக்கு மீண்டும் வெளியிடுகிறேன். மக்கள், தடுப்பூசி குறித்த புரளியை நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:ஒவ்வொரு இந்தியருக்கும், இன்று புதிய நம்பிக்கை பிறந்து உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பில், இந்தியாவுக்கு உள்ள திறமையை சந்தேகித்து, ஏராளமானோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். அவர்கள், வாயை மூடி, தடுப்பூசி குத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE