நார்வேயில் பைசர் தடுப்பூசி போட்டவர்கள் 23 பேர் உயிரிழப்பு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதியில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும்,
Norway, Pfizer, CovidVaccine, ReportsDeaths, பைசர், கொரோனா, தடுப்பூசி, நார்வே,

ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதியில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிர்ச்சி சம்பவமாக நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


latest tamil news



உயிரிழந்தவர்கள் அனைவரும் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும், அவர்கள் தடுப்பூசி பயன்படுத்திய பிறகு காய்ச்சல் போன்ற பிரச்னைகளை சந்தித்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 29 பேருக்கு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்தவும், வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்கவும் நார்வே அரசு அறிவுறுத்தியது. இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு இதுவரை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜன-202120:33:24 IST Report Abuse
vbs manian முகப்பேர் அவர்களே காரோண வைரஸ் ஆர் ஏன் ஏ டி ஏன் ஏ மாற்ற செய்யப்பட்டு தயாரிக்கிறார்கள். இதை ஜெனெடிக் மாடுலேஷன் என்று சொல்கிறார்கள். இப்படி தயாரிக்க பட்ட மருந்தால் விளைவுகள் ஏற்படலாம் என்று ஐரோப்பிய மருத்துவ விஞ்ஞானிகள் பதிவிட்டிருக்கிறார்கள். நான் படித்ததை பதிவிட்டேன். நான் மருத்துவர் அல்ல.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202118:03:23 IST Report Abuse
J.V. Iyer கடவுளே..கடவுளே..
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜன-202116:27:56 IST Report Abuse
vbs manian உலகில் பல மருத்துவ வல்லுநர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்டால் விளைவுகள் ஏற்படும் என்று. இதை உரக்க சொன்னால் சட்டம் அது இது என்று சொல்லி பயமுறுத்துவார்கள்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202117:30:37 IST Report Abuse
தமிழவேல் மரபணு மாற்றம் நமக்கல்ல, வைரசுக்கு.....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
17-ஜன-202117:51:42 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANமுகப்பேர் அவரு சொல்றது ஒருவேளை மரபணுமாற்ற கத்தரிக்காய் பத்தி எதுனா இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X