பொது செய்தி

இந்தியா

மறதி தான் அரசியலுக்கு அடிப்படை. அது, பொதுமக்களின் மறதியாகவும் இருக்கலாம்; தலைவர்களின் மறதியாகவும் இருக்கலாம்..

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த, முட்டுக்கட்டை போட்டது, அப்போதைய, பா.ஜ., அரசு. இந்த உண்மையை மறைத்து, காங்., தான் அதை செய்தது என்பது போல, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.- தமிழக காங்., தலைவர் அழகிரி'மறதி தான் அரசியலுக்கு அடிப்படை. அது, பொதுமக்களின் மறதியாகவும் இருக்கலாம்; தலைவர்களின் மறதியாகவும் இருக்கலாம்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்.,
மறதி தான் அரசியலுக்கு அடிப்படை. அது, பொதுமக்களின் மறதியாகவும் இருக்கலாம்; தலைவர்களின் மறதியாகவும் இருக்கலாம்..

ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த, முட்டுக்கட்டை போட்டது, அப்போதைய, பா.ஜ., அரசு. இந்த உண்மையை மறைத்து, காங்., தான் அதை செய்தது என்பது போல, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.
- தமிழக காங்., தலைவர் அழகிரி


'மறதி தான் அரசியலுக்கு அடிப்படை. அது, பொதுமக்களின் மறதியாகவும் இருக்கலாம்; தலைவர்களின் மறதியாகவும் இருக்கலாம்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.'நீட்' தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னரே, ஏழைக் குடும்பத்தில் பிறந்த, மாணவ - மாணவியர் மருத்துவப் படிப்பில் சேர்வது அதிகரித்துள்ளது.
- பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'உண்மை தான். ஆனால், தி.மு.க.,வினர், 'உல்டா'வாக, ஏழை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறாரே...' என, ஆச்சர்யம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.சங் பரிவார் அமைப்புகள், தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் போல, பாவ்லா காட்டுகின்றனர். இவர்களது மோடி அரசு தான் ஜல்லிக்கட்டை நிறுத்தி வைத்தது; பொங்கல் விடுமுறையை ரத்து செய்தது; புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது; மதுரை ரயிலுக்கு கூட, சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறது!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன்


'ஏன் குறைவாக பட்டியல் இடுகிறீர்கள்... உங்களின் கட்சியினரிடம் கேட்டால், மூன்று மணி நேரம் முழங்குவரே...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை.தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தது, காங்., அதை மறந்து, அந்தப் போட்டியை காண, தமிழகம் வந்து ரசித்துள்ளார், அதன் முன்னாள் தலைவர் ராகுல்.
- பா.ஜ., மாநில பொதுச் செயலர், கே.டி.ராகவன்


'வந்து ரசித்தபின், தடை செய்தது தவறு என்பதை புரிந்திருப்பார் அல்லவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச் செயலர், கே.டி.ராகவன் அறிக்கை.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, அறநிலையத் துறை அமைச்சருக்கு, 17 லட்சத்தில் இன்னோவா கார் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையை, இந்த தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கண்டும் காணாமல் உள்ளது தான் அநீதி.
- காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்


'பக்தர்களின் பணம், பகல் கொள்ளையிடப்படுகிறது என்கிறீர்கள் என்பது புரிகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை.வேளாண் சட்டங்களை விலக்க கோரி, 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு இன்னும் அலட்சியம் செய்யாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


latest tamil news
'தேரை இழுத்து தெருவில் விடுவதே, உங்களுக்கு வாடிக்கையாகி போய் விட்டது. உச்சநீதிமன்ற முடிவு தான் சரியாக இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.இந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும். தே.மு.தி.க., தமிழகத்துக்கு எழுச்சி தரும். தமிழக மக்களுக்கு எல்லா வளமும், இந்த ஆண்டிலேயே கிடைத்து, மகிழ்ச்சியோடு இருக்க, தே.மு.தி.க., பாடுபடும். 2021 தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வினர் கடுமையாக பாடுபட வேண்டும்.
- தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா


'உறங்கிக் கிடக்கும் கட்சியினரை, இப்படி கூறித் தான் உசுப்பேற்றி விட வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேச்சு.அ.தி.மு.க., அமைச்சர்கள், பா.ம.க., நிறுவனர், தலைவர் ஆகியோரிடையே நடந்த சந்திப்பு குறித்து, ஏற்கனவே ராமதாஸ் செய்தியை தெளிவாக, டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை.
- அமைச்சர் தங்கமணி


'நீங்கள் சொல்வது போலத் தான் அவரும் கூறினார். ஆனால், தேர்தலில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக பேசியதாகத் தானே பேச்சு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.போராடும் விவசாயிகள் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சொல்கிறது. இது, மத்திய அரசு இந்த பிரச்னையை, இரண்டு மாதங்களுக்கு தள்ளிப்போடுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்


'கோர்ட்டுக்கு போனால், இரண்டு மாதங்கள் இல்லை; இரண்டு ஆண்டுகள் கூட ஆகத் தான் செய்யும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு.தமிழகமே திரண்டு வந்து, சசிகலாவை வரவேற்க காத்திருக்கிறது. அவர்,அ.தி.மு.க.,வில் தொடர்வாரா அல்லது அ.ம.மு.க.,வில் இணைவாரா என்பது, அவர் வரும் போது தான் முடிவு செய்யப்படும்.
- அ.ம.மு.க., மாநில துணை பொதுச்செயலர் பழனியப்பன்


'முதலில் அவர், சிறையிலிருந்து வெளியே வரட்டும்; அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்பது தான், பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., மாநில துணை பொதுச்செயலர் பழனியப்பன் பேட்டி.வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக, வாகனப் பதிவு செய்யும் போது, பேன்சி எண்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு, குறிப்பிட்ட தொகை அரசுக்கு செலுத்த வேண்டும். தற்போது ஒரு எண்ணுக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, எண்ணை பெற முடியும் என்ற அவல நிலை உள்ளது.
- தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி


'இதற்கு முன், அ.தி.மு.க., அமைச்சராக நீங்கள் இருந்த போதும், இப்படித் தானா...' என கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேச்சு.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிங்க நடைபோட்டு கர்ஜனையோடு மீண்டும் வருவார். விஜயகாந்த் மகன் என்பதே எனக்கு பெரிய பதவி தான். என் அப்பாவை சிம்மாசனத்தில் அமர வைப்பதே என் லட்சியம்.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்


'விஜயகாந்த், சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுவதைப் பார்க்க ஆசை தான்... ஆனால், உடல்நிலை அப்படி இல்லையே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு.


Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜன-202119:01:18 IST Report Abuse
Endrum Indian சிறிய மாற்றம் "பணம்" "மறதி" உள்ள எல்லா இடங்களிலும்
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
17-ஜன-202118:49:38 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy கம்யூனிஸ்ட் அட்ரஸ் மட்டும் அல்ல டெபாசிட் இல்லாத கட்சி தலைவன் அருணன் பேராசிரியனா ?
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
17-ஜன-202118:39:36 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறது- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன். சம்ஸ்கிருதம் என்ன சீனா மொழியா ? இந்தியா மொழிதானே ? உருது மொழியில் பெயர் வைத்தால் இப்படி கூவுவானா ? இவன் இன்ன மத சார்பற்றவன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X