புதுச்சேரியில் காங்கிரசுக்கு'கல்தா'-தமிழகத்திலும் நெருக்கடி தருகிறது தி.மு.க.

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு கல்தா கொடுத்து விட்டு, அங்கு தி.மு.க., தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலும், இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி காத்திருக்கிறது.புதுச்சேரி மாநிலத்தில், தி.மு.க., ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன், புதுச்சேரி சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால், அம்மாநில கட்சிகள்
pondicherry, congress, cong, dmk, rahul, rahul gandhi, udayanithi, udayanithi stalin, புதுச்சேரி, திமுக, தி.மு.க., காங்கிரஸ், காங்., ராகுல், ராகுல் காந்தி, உதயநிதி, உதயநிதி ஸ்டாலின்,

புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு கல்தா கொடுத்து விட்டு, அங்கு தி.மு.க., தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலும், இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி காத்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில், தி.மு.க., ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன், புதுச்சேரி சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால், அம்மாநில கட்சிகள் மத்தியிலும், கூட்டணியிலும் குழப்பம்உருவாகி உள்ளது.காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, அம்மாநில அமைச்சர் ஒருவர், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், கடிதம் கொடுத்துள்ளார். அவர், எந்த நேரமும் அமைச்சர் பதவியை துறக்க கூடும். மற்றொரு அமைச்சர், ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன், பா.ஜ.,வில் சேர, டில்லி தலைவர்களை ரகசியமாக சந்தித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு, தற்போது ஆதரவு அளித்து வரும் தி.மு.க.,வும், கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. அங்கு, தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளரும், எம்.எல்.ஏ.,மான சிவா, திருவள்ளுவர் தின விழாவில் பேசுகையில், ''தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும். எந்த கட்சி வந்தாலும், தி.மு.க., தான் தலைமை வகிக்கும்,'' என்றார்.

புதுச்சேரி தி.மு.க., மேலிட பொறுப்பாளராக, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.நாளை, காலாப்பட்டில் நடைபெறும், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், ஜெகத்ரட்சகன் பங்கேற்கிறார்.அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளுகின்றனர். புதுச்சேரியில் பெரும்பான்மையாக வசிக்கும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகனை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடுவதால், அம்மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பது தடுக்கப்படும் என்பதால், பா.ஜ., வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரியை தொடர்ந்து, தமிழகத்திலும், காங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற சந்தேகம், தமிழக காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் மட்டுமே வழங்க, தி.மு.க., முன்வந்துள்ளது. அதற்கு சம்மதித்து, கூட்டணியில் நீடித்தால், காங்கிரசுக்கு சிக்கல் இருக்காது. இல்லையேல், புதுச்சேரியை போல், தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம்.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில், மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, காங்கிரஸ் தலைவர் ராகுல் வந்தார். ராகுலுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பார்வையிட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் முன்வரவில்லை. இளைஞர் அணி செயலர் உதயநிதியை மட்டும் அனுப்பி வைத்ததை, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் விரும்பவில்லை. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடப் போகும் முடிவு, ராகுலுக்கு தெரிய வந்ததால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். உதயநிதியை தனியாக சந்தித்து பேசுவதை, ராகுல் தவிர்த்தார்.


latest tamil newsநான்கு மணி நேரம், மதுரையில் தங்க திட்டமிட்டிருந்த ராகுல், ஜல்லிக்கட்டு மைதானத்தில், 45 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், ராகுல் மதிய உணவு சாப்பிடுவதற்கு, தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை தவிர்த்து விட்டு, மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஓட்டலுக்கு சென்றால், உதயநிதியை தனியாக சந்திக்க நேரிடும் என்பதால், அங்கு செல்வதை தவிர்த்துள்ளார். அதேசமயம், ஜல்லிக்கட்டு மைதானத்தில், ராகுல் அருகில் இருந்து, உதயநிதியும் போட்டியை பார்வையிட்டார். ஆனால், அரசியல் பற்றி, அவரிடம் ராகுல் பேசவில்லை. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜன-202121:08:46 IST Report Abuse
madhavan rajan அரசியல் பற்றி ராகுல் உதயநிதியிடம் பேசினால் அதைவிட அசிங்கம் வேறு இல்லை. வெற்றியோ தோல்வியோ அரசியல் அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய அளவில் செயல்படும் ராகுல் எங்கே. பத்துமாதம் முன்பு அப்பா தயவில் பதவியை பெற்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உதயா எங்கே. இதைவிட அசிங்கம் காங்கிரசுக்கு தேவையில்லை. ராகுல் ஜல்லிக்கட்டுக்கு வந்தா கன்னுக்குட்டியை (கைதட்டுக்குட்டியை) அனுப்பியது சிறந்த ராஜதந்திரம். இதைவிட ஒரு கூட்டணி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரை அவமானப்படுத்த முடியாது. அதுவுமில்லாமல் காங்கிரஸ் தமிழர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துத்தான் அந்த கட்சியை தமிழ்நாட்டில் திமுக வீழ்த்தியது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. இன்னும் காங்கிரசால் திமுக என்னும் தடி இல்லாமல் தமிழகத்தில் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடுகிறது. இதில் ராகுல் தமிழர்களை மதிக்கவேண்டும் என்று யாருக்கு அறிவுரை கூறுகிறார் என்று தெரியவில்லை. தமிழில் ஒரு பெயரை சொல்ல ராகுல் எவ்வளவு தடுமாறினார் என்பது கண்கூடு.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202120:14:34 IST Report Abuse
Saravanan அடுத்த முறை பப்பு தமிழகம் வந்தால் அவருடன் உதயநிதிய அனுப்ப மாட்டார்கள் அவருக்கு பதில் அவர் மகன் இன்பநிதியைத்தான் அனுப்புவார்கள் யார் கண்டார்கள் வார்டு மெம்பெர் யாராவது வந்தாலும் - வருவார்கள் அவருடன் பேச்சு நடத்த என்ன கொக்கி குமார் நான் சொல்வது சரிதானே....
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-ஜன-202118:36:58 IST Report Abuse
Poongavoor Raghupathy காங்கிரஸ் கட்சியின் நிலைமையை பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸ் கப்பல் ஆதரவு இல்லாமல் கவிழ இருக்கிறது. ராகுல் அரசியலை விட்டு வெளியில் சென்றால் நல்லது இல்லையெனில் அவர் மிகவும் இன்னும் அவமானம் பட நேரும். ஸ்டாலின் ராகுலை அடுத்த பிரதமர் என்று கூறிவிட்டு இப்போது ராகுலை தனியாக ஜல்லிக்கட்டுக்கு வந்து இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X