பொது செய்தி

இந்தியா

ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து சேவையில் மைல்கல்: பிரத்யேக வழித்தடத்தில் வருவாய் அதிகரிக்கும்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்தில், இந்திய ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், ரயில்வேயின் வருமானம் இரட்டிப்பாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சரக்கு போக்குவரத்துக்கு என, பிரத்யேக பாதை அமைக்க வேண்டும் என்பது, இந்திய ரயில்வேயின் பல ஆண்டு கனவு. ஏனெனில், பயணியர் ரயில்கள் செல்லும் தடத்தில் தான், சரக்கு ரயில்களும்
ரயில்வே, சரக்கு போக்குவரத்து, சேவை, மைல்கல், பிரத்யேக வழித்தடம், வருவாய், அதிகரிக்கும்

பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்தில், இந்திய ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், ரயில்வேயின் வருமானம் இரட்டிப்பாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு போக்குவரத்துக்கு என, பிரத்யேக பாதை அமைக்க வேண்டும் என்பது, இந்திய ரயில்வேயின் பல ஆண்டு கனவு. ஏனெனில், பயணியர் ரயில்கள் செல்லும் தடத்தில் தான், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் சேவை தாமதமாகிறது. குறித்த நேரத்தில் ரயில்களை இயக்குவது, ரயில்வேக்கு சவாலாக உள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் லுாதியானாவிலிருந்து, மேற்கு வங்க மாநிலம், டன்குனி வரை, 1,839 கி.மீ., துாரத்துக்கு, கிழக்கு பிராந்திய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் அமைக்க, ரயில்வே திட்டமிட்டது.


ஒப்புதல்


இந்த தடம், பஞ்சாபிலிருந்து ஹரியானா, உத்தர பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாக, மேற்கு வங்கத்துக்கு செல்லும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


latest tamil newsஇதேபோல், உத்தர பிரதேச மாநிலம் தாத்ரியிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் வரையில், 1,500 கி.மீ.,க்கும் அதிகமான துாரத்துக்கு, மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.இந்த வழித்தடத்தை, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக, மும்பை செல்லும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், நாட்டில், 70 சதவீத சரக்கு ரயில்கள், பயணியர் ரயில் பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என, கூறப்பட்டது.

எனினும், இந்த திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், 2006ம் ஆண்டு, அப்போது மத்தியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செயல்பட்ட, ஐ.மு., கூட்டணி அரசு ஒப்புதல் அளித்தது.


பிரச்னை


இந்த திட்டங்களை, 87 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த திட்டங்களுக்கு கடன் வாங்குவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. பலமுறை பேச்சு நடத்திய பின், உலக வங்கி, 13 ஆயிரத்து, 276 கோடி ரூபாய்; ஜே.ஐ.சி.ஏ., எனப்படும் ஜப்பான் சர்வ தேச ஒத்துழைப்பு நிறுவனம், 37 ஆயிரத்து, 960 கோடி ரூபாய் கடன் தரவும் சம்மதித்தன. ஆனால், மத்திய அரசு ஒப்புதல் அளித்து எட்டு ஆண்டுகளாகியும், இந்த திட்டத்தில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. பல மாநிலங்கள் வழியாக, இந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளதால், நிலம் கையகப்படுத்துவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த, 2014ல், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், தே.ஜ.,, கூட்டணி அரசு அமைந்தது. கிடப்பில் போடப்பட்டிருந்த இரண்டு திட்டங்களுக்கும் புத்துயிர் அளிக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. திட்டங்களுக்கு நிதி உடனடியாக ஒதுக்கப்பட்டது. பணிகள் சரியாக நடக்கின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டது.


எதிர்பார்ப்பு


அடுத்த ஆண்டு, ஜூனுக்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தான், கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில், நியூ பாபுர் - நியூ குர்ஜா வரை, 351 கி.மீ., துார தடத்தை, பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். சில நாட்கள் கழித்து. மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில், ஹரியானா மாநிலம் ரீவாரியிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் மதார் வரை அமைக்கப்பட்டுள்ள பாதையை, பிரதமர் திறந்து வைத்தார். இந்த இரண்டு தடங்களிலும், சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இரண்டு திட்டங்களும், முழுமையாக அடுத்த ஆண்டுக்குள் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் பற்றி, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும்.ரயில்வே இப்போது, 5,400 டன் சரக்குகளை கையாண்டு வருகிறது. திட்டங்கள் முடிந்து, போக்குவரத்து துவங்கிய பின், இது, 13 ஆயிரம் டன்னுக்கு மேல் அதிகரிக்கும். சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும், இரு மடங்காக அதிகரிக்கப்படும். பயணியர் ரயில் தடத்தில், சரக்கு ரயில்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ரயில்வேக்கு சரக்கு போக்குவரத்து சேவையால் கிடைக்கும் வருமானமும், இரு மடங்காக அதிகரிக்கும். தற்போது திறக்கப்பட்டுள்ள பாதைகளில், சரக்கு ரயில் போக்குவரத்து முழுமையாக துவக்கப்பட்டாலே, வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைவர். பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, பால் உட்பட பல பொருட்களை கையாண்டு, உலகளவில் சரக்கு ரயில் போக்குவரத்தில், இந்திய ரயில்வே நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்ட பின், சரக்கு போக்குவரத்தில் இந்திய ரயில்வே முதலிடத்தைப் பிடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கள ஆய்வு பணிகள் துவக்கம்


டில்லி - உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, டில்லி - -வாரணாசி இடையே, அதிவேக ரயில் தடம் அமைப்பதற்காக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆய்வுப் பணிகளை ரயில்வே துவக்கியுள்ளது. ஹெலிகாப்டர் மீது லேசர் கருவிகள் பொருத்தப்பட்டு, கள ஆய்வு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. தேவையான தகவல்களை துல்லியமாக வழங்குவதால், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, இந்த கள ஆய்வு மிக அத்தியாவசியமாகிறது. கள ஆய்வு பணிகள் முடிந்த பின், டில்லி - வாரணாசி இடையே அதிவேக ரயிலை இயக்குவதற்கான வழித்தடத்தை அமைக்கும் பணி துவக்கப்படும் என, தெரிகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202117:35:09 IST Report Abuse
ஆப்பு எதுக்கு பிரத்தியேக தடம்? 8 மணி நேரம் ஓடிக்கிட்டிருந்த திருச்சி சென்னை அதிவேக ரயில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் 5 மணி நேரத்தில் ஓடுது. அதுவும் டபள் டராக். போக ஒண்ணு, வர ஒண்ணு. நடுவில் ஏகப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள்.அதுல நிறுத்தி இயக்கலாம். ஆனா, இவிங்க என்ன செஞ்சாங்க? இருக்குற குட் ஷெட்டை யெல்லாம் இடிச்சு அதிவேக ரயில் பிளாட்பாரமா மாத்திட்டாங்க. விழுப்புரம் குட்ஷெட் மிகபிரசித்தமான ஒண்ணு. அந்தக் காலத்தில் Cauvery Queen Express Goods, Pennar Queen Express Goods நு திருச்சி முதல் ஆந்திரா பாக்காலா வரை ஓடும். நடுவில் லாரி சர்வீஸ் பிரபலமாகவும், சீப்பாகவும் இருந்ததால் எல்லோரும் அதுக்குத் தாவுனாங்க. விழுப்புரம் குட்ஷ்ட்டை இடிச்சு, ரயில்வே வேலைகளை காலி பண்ணி, ரெண்டு பெரிய ரயில்வே காலனிகளை காலி பண்ணிட்டாங்க. ஆயிரம் ஏக்கர் இடம். என்னிக்கி அதானி கைக்கு மாறப்போகுதோ? இதுல புது சரக்கு ரயில்தடம் ஏராளமான விளை நிலங்களை காவு வாங்கும். இருக்கற தடங்களை efficient ஆக உபயோகிக்கிற வழியைப் பார்க்கலாம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஜன-202116:10:53 IST Report Abuse
Vijay D Ratnam அதுபோல சென்னை - தூத்துக்குடி, சென்னை - கொச்சின், சென்னை - மங்களூர் இடையே பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கலாம். ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் நாங்க விடுவோமா. சேலம் சென்னை எட்டுவழிச்சாலை எதிர்ப்பு மாதிரி போராட்டத்துல இறங்கிடுவோம்ல. சீனா தூக்கி எரியும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் அரசியல்வியாதிகள் எங்களை உசுப்பி விடுவார்கள். நாங்களும் எருமை மாட்டு ஜென்மம் மாதிரி அவிங்க பேச்சை கேட்டுகிட்டு போராட்டத்துல குதிப்போம்ல.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-ஜன-202114:53:47 IST Report Abuse
Loganathan Kuttuva வளர்ந்த மேலை நாடுகளில் சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனி ரயில் தடம் உள்ளது.சரக்கு போக்குவரத்திற்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் .ரயில் நிர்வாகத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலம் பயணிக்க ரயிலை விட அதிக வருமானம் கிடைக்கிறது .எரிபொருள் சேமிப்பு அதிகம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X