‛மிஸ் வேர்ல்டு ' கனவில் ஸ்வாதி

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 17, 2021
Share
Advertisement
நீல வானம் தேடும் வெண்ணிற நிலா கூட்டம், புன்னகையில் பூத்திடும் பெரிய பூக்கூட்டம், பொன்முகம் இளசுகளின் இதயத்திற்கு இதமான மருந்து, தேகமெங்கும் தேவலோக பேரழகின் விருந்து... என மிஸ் வேர்ல்டு கனவில் மாடலிங் துறையில் களமிறங்கி கலக்கும் சென்னை 'டாக்டர் மாணவி' ஸ்வாதி மனம் திறக்கிறார்...மாடலிங் துறைக்கு வந்ததற்கான காரணம்? நான் எம்.பி.பி.எஸ்., 2வது ஆண்டு படிக்கிறேன். சமூக
‛மிஸ் வேர்ல்டு ' கனவில் ஸ்வாதி

நீல வானம் தேடும் வெண்ணிற நிலா கூட்டம், புன்னகையில் பூத்திடும் பெரிய பூக்கூட்டம், பொன்முகம் இளசுகளின் இதயத்திற்கு இதமான மருந்து, தேகமெங்கும் தேவலோக பேரழகின் விருந்து... என மிஸ் வேர்ல்டு கனவில் மாடலிங் துறையில் களமிறங்கி கலக்கும் சென்னை 'டாக்டர் மாணவி' ஸ்வாதி மனம் திறக்கிறார்...


மாடலிங் துறைக்கு வந்ததற்கான காரணம்?


நான் எம்.பி.பி.எஸ்., 2வது ஆண்டு படிக்கிறேன். சமூக சேவைகள் நிறைய பண்ணிட்டு இருக்கேன். எனக்கு மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வேர்ல்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம் அதனால் தான் மாடலிங் துறை வழி சாதிக்கலாம்னு வந்தேன்.


மாடலிங் தவிர என்ன பண்றீங்க?


நிறைய விளம்பரம், ஆவண படங்களில் நடிச்சிருக்கேன். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவண படங்கள் பண்ணியிருக்கேன். அடுத்து சாணக்யா சகோதரர்களின் குறும்படம் ஒன்றில் நடக்க போறேன். பிரைடல், ரீ கிரியேஷன் லுக் ஷூட் எல்லாம் பண்றேன். சினிமா ஆசை எப்போதும் வராது.


மிஸ் வேர்ல்டு, யூனிவர்ஸ் கனவு சாத்தியமாகுமா ?


சென்னை இன்டர்நேஷனல் யூத் பெஸ்டிவல் பேஷன் சேலஞ்சில் நான் தான் முதலிடம் பிடித்து கோல்டு மெடல் வாங்கினேன். மிஸ் தமிழ்நாடு போட்டியில் டாப் 12 வந்தேன். இதெல்லாம் சாத்தியமாகும் போது மிஸ் சவுத், மிஸ் வேர்ல்டு கனவுகளும் சாத்தியமாகும்னு நம்பி பயிற்சிக்கு போறேன்.


கனவுகளை நிஜமாக்க யாரிடம் பயிற்சிக்கு செல்கிறீர்கள்?


2018 மிஸ் இந்தியா போட்டியில் செகண்ட் ரன்னர் அப் வாங்கின சிரையா ராவ், 2018 மிஸ் இந்தியா டைட்டில் வின்னர் அனு பிரீத்திவாஸ் ஆகியோரிடம் பயிற்சி பெறுகிறேன். ரேம்ப் வாக், மேக்கப், டிரஸ்ஸிங், ஸ்டைலிங் பற்றி தெரிஞ்சுக்க மும்பைக்கு போறேன்.


மாடலிங் துறை என்றோலே பலர் பயப்படுகிறார்களே?


அனைத்து துறைகளிலும் பிரச்னைகள் இருக்க தான் செய்யும். ஒரு பெண்ணா அதை எதிர்கொள்ள தயாராகி, பயமில்லாமல் தான் களமிறங்கனும்.


டாக்டர், மிஸ் வேர்ல்டு... இதில் எது உங்கள் எதிர்காலம்?


இரண்டு துறைகளையும் விட்டு கொடுக்கவே மாட்டேன். என் டாக்டர் படிப்பை மாடலிங் துறைக்கு எப்படி பயன்படுத்தலாம்னு தான் யோசிப்பேன்.


இவ்வளவு ஒல்லியாக இருக்கீங்களே உங்கள் டயட் என்ன?


என் உயரம் 5.7 அடி, எடை 50, டயட் இருக்கனும்னு ஸ்பெஷலா எதுவும் சாப்பிடுவதில்லை. வழக்கமான உணவுகள் தான் சாப்பிடுறேன். மனம் தெளிவாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


என்னென்ன சமூக சேவை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?

மாஸ்க், சானிடைசர், ஆரோக்கிய உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். கிராமங்களுக்கு சென்று சுத்தம், சுகாதாரமாக வாழ்வது எப்படின்னு சொல்லி கொடுக்கிறேன்.
இன்ஸ்டாகிராம் முகவரி:dr_sugarieofficial

ஸ்ரீனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X