பொது செய்தி

இந்தியா

சென்னையில் இருந்து படேல் சிலைக்கு சிறப்பு ரயில்: பிரதமர் துவக்கி வைத்தார்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியாவிற்கு சிறப்பு ரயில்களை பிரதமர் துவக்கி வைத்தார்.குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண செல்லும் வகையில், 8 சிறப்பு ரயில்களை துவக்கி வைத்தார். சென்னை, டில்லி, மும்பை, ஆமதாபாத்
சென்னை, கேவாடியா, சிறப்பு ரயில், பிரதமர் மோடி,

புதுடில்லி: சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியாவிற்கு சிறப்பு ரயில்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண செல்லும் வகையில், 8 சிறப்பு ரயில்களை துவக்கி வைத்தார். சென்னை, டில்லி, மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் இருந்து கேவாடியாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.,20 முதல் சென்னையில் இருந்து கேவாடியாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


குஜராத்தில் உள்ள கேவடியா பகுதியில் உலகின் மிக உயரமான ஒற்றுமைச் சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்விதமாக, 8 நகரங்களில் இருந்து கேவடியா நகருக்கு ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். நான் தொடங்கி வைத்த ரயில்களில் ஒன்று, சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேவடியாவுக்கு புறப்பட்டுள்ளது. என்னவொரு அழகான தற்செயல் நிகழ்வு பாருங்கள். இன்று எம்ஜிஆரின் பிறந்த நாள் என மோடி குறிப்பிட்டார். ஏழைகளுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட உன்னத தலைவர் எம்ஜிஆர் எனவும் மோடி புகழாரம் சூட்டினார்.

latest tamil newsவீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரயில்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம். எட்டு இடங்களில் இருந்து கேவாடியாவுக்கு ரயில்கள் செல்லும். இன்று துவக்கப்பட்ட 8 ரயில்களில், ஒரு ரயிலானது சென்னையில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. இன்று அவரது பிறந்த நாளில், இது நடப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர்., தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணித்தவர். இந்த ரயில்களானது, ஒற்றுமை சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும். கேவாடியாவின் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.


latest tamil newsஒற்றுமை சிலையை பார்வையிட அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பார்க்க வருபவர்களை விட, கேவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியில் கேவாடியா முன்னேறி வருகிறது. இந்த நகரத்திற்கு அனைவரும் வர வேண்டும். முன்பு கிராமமாக இருந்த கேவாடியா, இன்று சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
18-ஜன-202100:51:17 IST Report Abuse
V Mohan It is sad so many don't understand how pride for India this is. This is world's largest statue which should proud as it is for one of the hero. This statue is not government funded fully. 70% is trust and private fund this has already started collecting almost 50% back. It is great place for tourism so money is not to private hands but to the government after maintenance. This is not DMK project where public money is taken and goes into their family pocket. People of TN should wake up .
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202122:54:03 IST Report Abuse
தமிழவேல் சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்னு சொல்ற நாம், அந்த சிலையை நாம செய்திருக்கணும்.... இது, காலத்துக்கும் சீனாக்காரன ஞாபகப் படுத்தும்..
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
17-ஜன-202120:26:52 IST Report Abuse
தமிழ்வேள் கட்டுமரம் பெயரில் உள்ள குடியிருப்புகள் சர்தார் படேல் நகர் என்று மாற்றப்படவேண்டும் ...அண்ணா நகர் நேதாஜி நகர் என்று பெயர்மாற்றம் செய்யப்படவேண்டும் ....பெரியார் நகர்கள் அனைத்தும் ஜெயஹிந்த் செண்பகராமன் நகர் என்றோ வஉசி நகர் என்றோ பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் .....அண்ணா பெரியார் கட்டுமரம் போன்றொல் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன பெரிய தியாகம் செய்தார்கள் ? டுபாக்கூர் ஆசாமிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X