புதுடில்லி: எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமாவரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு, கமல் மாலை அணிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவு:
பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்
— Narendra Modi (@narendramodi) January 17, 2021

Bharat Ratna MGR lives in the hearts of several people. Be it the world of films or politics, he was widely respected. During his CM tenures, he initiated numerous efforts towards poverty alleviation and also emphasised on women empowerment. Tributes to MGR on his Jayanti.
— Narendra Modi (@narendramodi) January 17, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE